மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டி குக்கரில் சமைத்த கணவர்.. போலீசிடம் சிக்கியதால் தற்கொலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிட்னி ஆஸ்திரேலியாவில் கணவர் ஒருவர் தன் காதல் மனைவியை கொன்று துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் சமைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரிடம் சிக்கியதால் கணவரும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள குபான்ஸ் லேண்ட் நகரை சேர்ந்தவர் 27 வயதானவர் மார்கஸ் வோல்க். இவரது மனைவி இந்தோனேசியாவை சேர்ந்த மயாங் பிரசெப்யோ. அவருக்கு வயது 23.

மார்கஸ் கப்பலில் சமையல்காரராக பணிபுரிந்தார், அப்போது ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

பாலியல் தொழில் செய்த தம்பதி

பாலியல் தொழில் செய்த தம்பதி

இந்நிலையில் மார்கசின் சம்பளம் போததால் கணவன் மனைவி இருவரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இருப்பினும் ஒரே வீட்டில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் மனைவி மயாங்கை, மார்கஸ் வோல்க் கொலை செய்தார்.

குக்கரில் சமைத்த கணவர்

குக்கரில் சமைத்த கணவர்

பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி ஒரு குக்கரில் போட்டு மின்சார அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. எனவே மின்சார அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு உடனடியாக சரி பார்க்கும்படி அழைத்துள்ளார்.

பன்றியை சமைக்கிறேன்

பன்றியை சமைக்கிறேன்

அங்கு வந்த ஊழியர் வீட்டில் துர்நாற்றம் வருகிறதே எனக்கேட்டுள்ளார். அதற்கு முழு பன்றியை சமைத்துக் கொண்டு இருக்கிறேன், எனவே நாற்றத்தை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று வோல்க் கூறியுள்ளார். ஆனால் சமையல் அறையை சுற்றி வினோதமான பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். மின் இணைப்பை சரி செய்து விட்டு வெளியேறிய அவர், அதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளார்.

கழுத்தை அறுத்து தற்கொலை

கழுத்தை அறுத்து தற்கொலை

உடனே விரைந்து வந்த போலீசாரிடம் நீங்கள் பரிசோதனை செய்யுங்கள், வீட்டின் பின்புறம் உள்ள நாய்களை அவிழ்த்து விட்டு வருகிறேன் என கூறிவிட்டு சென்றுள்ளார். பின்புறம் வாசல் வழியாக சென்ற அவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். ரத்த போக்கு அதிகமாகவே அதே இடத்தில் அவர் உயிரிழந்தார்.

குக்கரில் கொதித்த உடல்

குக்கரில் கொதித்த உடல்

இதனிடையே வீட்டில் சோதனை செய்த போலீசார் மனைவி உடல் வெட்டப்பட்டு குக்கரில் கொதித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். காதல் மனைவியை கொன்று குக்கரில் சமைத்து கணவனும் தற்கொலை செய்து கொண்டசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Australia, a husband kills his love wife and cuts her and cooked in a cooker. The husband also committed suicide after caught to police.
Please Wait while comments are loading...