ஜப்பானில் 2 விமானங்கள் மோதல்.. இறக்கைகள் சிக்கி கொண்டதால் பரபரப்பு.. தப்பிய 300 பேர்
டோக்கியோ: ஜப்பானில் 2 பயணிகள் விமானங்கள் மோதிக்கொண்டன. இதில் ஒரு விமானத்தின் இறக்கை இன்னொரு விமானத்தில் சிக்கி கொண்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக 300 பேர் உயிர் தப்பினர்.
தற்போது இந்தியா உள்பட பல நாடுகளில் குளிர்காலம் நிலவி வருகிறது. கனடா உள்பட பல நாடுகளில் பனியின் தாக்கம் அதிகம் உள்ளது. சில இடங்களில் பனி மழையாக கொட்டி வருகிறது. இதனால் விமான சேவைகள் என்பது அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகிறது.

காலை நேரத்தில் நிலவும் பனிமூட்டம் காரணமாகவும், மோசமான காலநிலையால் பல விமானங்கள் மாற்றி விடப்படுகின்றன. அதோடு சில விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு ஜப்பானும் விதிவிலக்கல்ல.
ஜப்பானிலும் தற்போது கடும் குளிர் என்பது நிலவி வருகிறது. இந்நிலையில் தான் ஜப்பான் வடக்கு பகுதியில் ஹோக்கைடோ தீவில் அமைந்து இருக்கும் நியூ சிடோஸ் விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பட தயாராக இருந்தன.
கொரியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் என்பது 289 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் புறப்பட தயாராக இருந்தது. இந்த வேளையில் ‛டோவிங் கார்’ கொரியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பின்னோக்கி தள்ளி கொண்டிருந்தது. பனிப்பொழுவின் காரணமாக ஓடுபாதை என்பது ஈரமாக இருந்தது.
மாதம் ரூ.1.37 லட்சம் சம்பளம்.. இஸ்ரேலில் வேலை வேண்டுமா? ஜனவரி 20 வரை ஆட்சேர்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க
இந்த வேளையில் திடீரென்று அந்த விமானம் வேகமாக நகர்ந்ததோடு அதன் இறக்கை என்பது அருகே நின்ற கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானத்தின் இறக்கையுடன் பயங்கர சத்தத்துடன் உரசியது. இதையடுத்து உடனடியாக விமானம் நின்றது. அதிர்ஷ்டவசமாக இந்த விமான விபத்தால் வேறு எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. விமான பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என 300 பேர் பாதுகாப்பாக இருந்தனர்.
இதுபற்றி கொரியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் கூறுகையில், ‛‛கடும் பனிப்பொழிவுக்கு நடுவே விமானத்தை டோவிங் கார் தள்ளியதால் தான் இந்த விபத்து நடந்தது’’ என கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications