மாதம் ரூ.1.37 லட்சம் சம்பளம்.. இஸ்ரேலில் வேலை வேண்டுமா? ஜனவரி 20 வரை ஆட்சேர்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க
சண்டிகர்: இஸ்ரேலில் கட்டுமான பணிக்கு 10 ஆயிரம் பேர் தேர்வு செய்வதற்கான நேர்க்காணல் தொடங்கி உள்ளது. இந்த பணிக்கு மாதம் ரூ.1.37 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ள நிலையில் நேர்க்காணலில் வரும் 20ம் தேதி வரை பொதுமக்கள் பங்கேற்கலாம்.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 7 ம் தேதி இஸ்ரேல் மீது கசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இஸ்ரேல் பதிலடியை தொடங்கியது.

போர் தொடங்கிவிட்டதாக கூறி காசா நகர் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. தற்போது வரை காசாவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். தற்போது காசாவில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை நடத்தி வருகிறது.
இதற்கிடையே தான் இஸ்ரேலில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த பாலஸ்தீனத்தின் தொழிலாளர்கள் வெளியேறி உள்ளனர். இதனால் அங்கு கட்டுமான பணிகள் முடங்கி உள்ளன. இத்தகைய சூழலில் தான் இஸ்ரேலில் கட்டுமான பணிக்கு இந்தியாவில் இருந்து ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இஸ்ரேல் சென்று பணியாற்றலாம்.
ரூ.71,900 சம்பளம்! சென்னை ஹைகோர்ட்டில் டைப்பிஸ்ட், டெலிபோன் - ஜெராக்ஸ் ஆபரேட்டர், கேஷியர் வேலை
அதாவது கட்டுமான பணிக்கான கொத்தனார், தச்சு தொழிலாளி டைல்ஸ் ஓட்டுபவர், கம்பி கட்டுபவர் உள்ளிட்டவர்கள் அதிகமாக இஸ்ரேலுக்கு தேவைப்படுகிறது. இந்நிலையில் தான் 10,000 பேரை தேர்வு செய்து இஸ்ரேல் அழைத்து செல்லும் வகையில் 15 பேர் கொண்ட இஸ்ரேல் குழு இந்தியா வந்துள்ளது. இவர்கள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்களை அவர்கள் விரும்பும்பட்சத்தில் இஸ்ரேலுக்கு அழைத்து செல்ல உள்ளனர்
இதற்கான முதற்கட்ட ஆட்சேர்ப்பு முகாம் என்பது ஹரியானாவில் தொடங்கி உள்ளது. இன்று தொடங்கிய இந்த ஆட்சேர்ப்பு முகாம் 5 நாட்கள் அதாவது வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.1.37 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். அதுமட்டுமின்றி மருத்துவ காப்பீடு, உணவு, தங்குமிடம், மாதம் ரூ.16,515 போனஸ் உள்ளிட்டவையும் வழங்கப்படும்.
கைநிறைய சம்பளம்.. தேர்வு இன்றி இசிஐஎல் நிறுவனத்தில் அசத்தலான வேலை.. 1100 காலியிடங்கள்
இந்த குழு அடுத்ததாக உத்தர பிரதேசத்தில் ஆட்சேர்ப்பை நடத்த உள்ளது. உத்தர பிரதேசத்தில் ஜனவரி 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஆட்சேர்ப்பு என்பது நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications