இந்தியா வந்த ‘அறிவாளி’! இக்கட்டான நேரத்தில் தோள் கொடுத்த அமெரிக்கா..இனி தான் பாகிஸ்தானுக்கு கச்சேரி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் பிரம்மோஸ், ஆகாஷ் ஆகிய ஏவுகணைகள் இந்தியாவுக்கு தோள் கொடுத்த நிலையில் ரஷ்யாவின் எஸ்-400 பாதுகாப்பு அமைப்பு, பிரான்சின் ரபேல் விமானங்கள் இந்தியாவுக்கு உறுதுணையாக இருந்தன. இந்த நிலையில் தனது ஆயுத பலத்தை மேலும் விரிவாக்கும் வகையில் பல்வேறு ஆயுதங்களை இந்தியா கொள்முதல் செய்ய இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் அமெரிக்க தயாரிப்பு விபாட் ட்ரோன்கள் இந்தியா வந்திருக்கின்றன.

கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கி வருகிறது. தற்போது பாகிஸ்தான் இந்தியா இடையிலான மோதலின் போது கடந்த காலங்களில் இந்தியா பலப்படுத்தி வைத்திருந்த ராணுவம் சிறப்பாக செயல்பட்டது. முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தின.

குறிப்பாக வான்வழி தாக்குதலுக்கு பல்வேறு உபகரணங்கள் இந்தியாவிடம் இருந்தன. மேலும் பாகிஸ்தானின் ஏவுகணைகள், ட்ரோன்கள் ஆகியவற்றை அழிக்க இந்தியாவின் பாதுகாப்பு வான் அமைப்புகளும், ரஷ்யாவிடம் இருந்து பெற்ற எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பும் மிக்க உறுதுணையாக இருந்தன.

India Drone US

இந்த நிலையில் ராணுவம் தேவைக்கேற்ப கூடுதல் ஆயுதங்களை வாங்கிக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நவீன விபாட் ட்ரோன்கள் இந்தியா வந்திருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடைபெற்று வரும் நிலையில் செயற்கை நுண்ணறிவு ட்ரோன்களை உக்ரைன் பயன்படுத்தியது.

இதனை அடுத்து 'காமிகாஷோ' என்ற பெயரில் ரஷ்யாவும் செயற்கை நுண்ணறிவு ட்ரோன்களை அறிமுகப்படுத்தியது. டுவிக் என அழைக்கப்படும் இந்த வகையான ட்ரோன்கள், எதிரிகளின் பாதுகாப்பு அமைப்புகள், கவச வாகனங்கள், ராணுவ தளவாடங்களை 180 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து சென்று 30 கிலோமீட்டர் தூரம் வரை இருக்கும் இலக்குகளை தாக்கும். முழுக்க முழுக்க தானியங்கி முறையில் செயல்படும் இந்த ட்ரோன்கள் ஜாமர்கள், ஜிபிஎஸ் மற்றும் வழிகாட்டி அமைப்புகள் முடக்கப்பட்டாலும் இலக்கை வெற்றிகரமாக தாக்கி விட்டு திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அமெரிக்காவின் அண்டூரில் மற்றும் ஷீல்டு ஏஐ போன்ற நிறுவனங்கள் விபாட் மற்றும் நோவா ஆகிய செயற்கை தொழில்நுட்ப ட்ரோன்களை தயாரிக்கின்றன. இந்த ட்ரோன்களின் செயற்கை நுண்ணறிவு காட்சி, நேவிகேஷன் ஆகியவற்றின் மூலம் இலக்குகளை கண்காணித்து துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும். மேலும் எல்லாவிதமான சூழல்கள், அனைத்து விதமான கால நிலைகளை சமாளித்து இந்த ட்ரோன்கள் செயல்பட கூடியவை. போர் விமானங்கள் அதிக அளவில் செலவு பிடிக்கக் கூடியவை. இதனால் விமானிகள் இறப்பு போன்ற சம்பவங்களும் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

வரும் காலங்களில் முழுக்க முழுக்க ட்ரோன்கள் மூலமாக போர்கள் நடக்கும் என கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், அமெரிக்காவிடம் விபாட் ட்ரோன்களை இந்தியா கேட்டிருந்தது. தற்போது அவை இந்தியா வந்திருக்கின்றன. எம்க்யூ 35 என அழைக்கப்படும் இந்த ட்ரோன்கள் செங்குத்தாகவே தரையிறங்கவும் மேல் எழும்பவும் முடியும். இந்த ட்ரோன்களுக்கு தனியாக ஆபரேட்டர் தேவையில்லை. தானாக இலக்கை தேர்வு செய்து 500 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்குகளை தாக்கும் திறன் உடையது. இதில் சுமார் 11 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை எடுத்துச் செல்லலாம். இந்த ட்ரோன்கள் அமெரிக்காவின் யூஎஸ்எஸ் மைக்கேல் மான்சூரில் பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட நிலையில், தற்போது அது இந்தியாவுக்கும் வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+