பாகிஸ்தானை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்.. லாகூர், இஸ்லாமாபாத்தை தாக்கும் இந்தியா! கடும் அட்டாக்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் திடீரென்று ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. அதனை வானிலேயே நம் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் தாக்கி அழித்து தள்ளியது. மேலும் பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது. இருநாடுகள் இடையேயான பதற்றம் என்பது அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலடி தாக்குதலை இந்தியா தொடங்கி உள்ளது. பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி மற்றும் சியால்கோட்டை நோக்கி நம் நாடு ஏவுகணைகளை வீசி பதிலடி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் மீது நம் நாடு ஏவுகணை தாக்குதலை நடத்தியது. மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தான் நம் நாட்டின் 15 நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை தொடங்கியது.

இந்த தாக்குதல் ரேடார் உள்பட வான்வெளி ஏவுகணை தடுப்பு சாதனங்கள் மூலம் நம் நாடு முறியடிக்கப்பட்டதோடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி உள்பட பல முக்கிய நகரங்களில் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில்
பாகிஸ்தான் நிலைக்குலைந்து போய் உள்ளது. இதற்கிடையே தான் இன்று இரவு ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் உள்ள மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டது.
இந்த தாக்குதல்களை நம் நாடு வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்கள் வானிலேயே இடைமறித்து அழித்தன. மேலும் பாகிஸ்தான் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் மின்விளக்குகள் அழிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே தான் பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் முப்படை தளபதிகளும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. அதன்படி பாகிஸ்தானின் லாகூர், சியால்கோட், இஸ்லாலமாபாத் மற்றும் கராச்சி உள்ளிட்ட நகரங்களில் ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.. நம் நாட்டில் இருந்து ஏவுகணைகள் சீறிப்பாய்ந்து பாகிஸ்தானின் முக்கிய நகரங்களை பதம் பார்த்தது. இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் என்பது அதிகரித்துள்ளது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications