Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கம்போடியாவில் விஷ்ணு சிலை தகர்ப்பு.." தாய்லாந்து ராணுவம் அடாவடி.. உச்சக்கட்ட பதற்றம்

Subscribe to Oneindia Tamil

புனோம் பென்: தெற்காசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே கடந்த சில காலமாகவே மோதல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதற்கிடையே அங்கு கம்போடியாவில் உள்ள மிக பெரிய விஷ்ணு சிலை ஒன்று இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளது. தாய்லாந்து தரப்பே இந்தச் செயலை மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் செயலுக்கு இந்தியா உட்பட பல்வேறு தரப்பினும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த சில வாரங்களாகவே தெற்காசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே மோதல் இருந்து வருகிறது. இரு தரப்புமே எல்லையில் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வந்தன. இதனால் எல்லையில் இருக்கும் கிராம மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் போர் வெடிக்கும் சூழலும் கூட ஏற்பட்டது. 16 நாட்கள் நீடித்த இந்த கடுமையான மோதல்களில் இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளனர்.

India Calls Demolition of Lord Vishnu Statue Disrespectful Amid Thailand-Cambodia Border Clashes

விஷ்ணு சிலை இடிப்பு

இதற்கிடையே தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதலில், சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள விஷ்ணு சிலை ஒன்றை தாய்லாந்து இடித்துவிட்டதாக கம்போடியா குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இரு நாடுகளிடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது.

என்ன நடந்தது!

இது தொடர்பாகப் பிரியா விஹியர் செய்தித் தொடர்பாளர் லிம் சான்பன்ஹா கூறுகையில், "கம்போடியாவின் செஸ் பகுதியில் அமைந்துள்ள விஷ்ணு சிலை இடிக்கப்பட்டது. இந்தச் சிலை 2014ல் கட்டப்பட்டது. தாய்லாந்து எல்லையிலிருந்து சுமார் 100 மீட்டர் (328 அடி) தொலைவில் உள்ள இந்த சிலை கடந்த திங்கள்கிழமை தகர்க்கப்பட்டது.. பௌத்த, இந்து மதத்தினரால் இந்த சிலை வணங்கப்பட்டு வந்தது. அப்படியிருக்கும்போது இதை இடித்ததை ஏற்க முடியாது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்றார்.

தாய்லாந்து அரசே இந்தச் சிலையை இடித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருப்பினும், இந்த விவகாரத்தில் தாய்லாந்து இதுவரை மவுனமாகவே இருக்கிறது. எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை.

கம்போடியா

'பேக்ஹோ லோடர்' மூலம் விஷ்ணு சிலை இடிப்பதைக் காட்டும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சிலர் இது ஏஐ வீடியோவாக இருக்கலாம் என முதலில் குறிப்பிட்டனர். இருப்பினும், இது ஏஐ வீடியோவாக இருக்க வாய்ப்பில்லை என்றே வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்து மற்றும் பௌத்தர்களால் வணங்கப்படும் இச்சிலை ஒரு வழிபாட்டுத் தலம் என கம்போடியா கூறியுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க தாய்லாந்து, கம்போடியா இடையே போர் நிறுத்தம் கொண்டு வர அமைதி பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. ராணுவ அதிகாரிகள் இந்த போர்நிறுத்தத்தையில் இறங்கியுள்ளனர். தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் சூரசாந்த் கொங்சிரி இதை உறுதிப்படுத்தினார். இந்த அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா கண்டனம்

இந்த சம்பவத்திற்கு இந்தியா புதன்கிழமை வன்மையான கண்டனம் தெரிவித்தது. ராணுவ மோதல்கள் இருந்தாலும், உலகெங்கிலுமுள்ள பக்தர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் இத்தகைய அவமரியாதையான செயல்கள் நடக்கவே கூடாது என்று இந்தியா வலியுறுத்தியது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "இந்து மற்றும் பௌத்த மக்கள் அந்தச் சிலையை வழிப்பட்டு வந்தனர். அதை இதுபோல இடித்ததை ஏற்க முடியாது" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+