டிவிஸ்ட்.. 370 சட்டத்தை நீக்குவது பற்றி இந்தியா எங்களிடம் எதுவுமே சொல்லவில்லை.. கைவிரித்த அமெரிக்கா
நியூயார்க்: காஷ்மீரில் இந்தியா செய்யும் மாற்றங்கள் குறித்து தங்களிடம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நீண்ட காலமாக நீடித்து வந்த காஷ்மீர் பிரச்சனையில் நேற்று முதல்நாள் அதிரடி திருப்பம் நிகழ்ந்தது. ராஜ்ய சபாவில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது அமெரிக்க அரசும் கருத்து தெரிவித்ததாக செய்திகள் வந்தது.
அதில், காஷ்மீரில் தற்போது இந்தியா செய்யும் மாற்றங்கள் என்பது அவர்களின் தனிப்பட்ட முடிவு . இது கண்டிப்பாக அவர்களின் உள்நாட்டு பிரச்சனைதான். அவர்களின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவர்களின் உள்நாட்டு விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.
அங்கு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதும் . இரண்டாக அந்த மாநிலம் பிரிக்கப்பட்டதும் தெரியும். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு நடக்கும் விஷயங்களை வெள்ளை மாளிகை கவனித்து வருகிறது. காஷ்மீரில் நடக்கும் விஷயங்கள் எங்களுக்கு தெரியும், என்று வெள்ளை மாளிகை தெரிவித்தாக செய்திகள் வந்தது.
ஆனால் இதை தற்போது அமெரிக்கா மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதில், அமெரிக்காவின் காஷ்மீர் நிலைப்பாடு என்று வெளியாகும் செய்திகளில் உண்மை கிடையாது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முன் இந்தியா அமெரிக்காவிடம் தெரிவிக்கவில்லை, அனுமதி கேட்கவில்லை. இதை பற்றி அறிவிப்பு வெளிவந்த பின்புதான் தெரியும், என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இதனால் காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications