அமலுக்கு வந்த போர்நிறுத்தம்.. இஸ்ரேலுக்கான இந்திய தூதர் நியமனம்.. யார் இந்த ஜிதேந்திர பால் சிங்?
டெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பணியாற்றி வரும் ஜிதேந்திர பால் சிங் இஸ்ரேலுக்கான இந்திய தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்த பொறுப்பேற்கவுள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 2023ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது பணய கைதிகளாக ஏராளமானோரை பிடித்து சென்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது. இதனால் காசாவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பொதுமக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் பாலஸ்தீன சிறை கைகளுக்கு பதிலாக இஸ்ரேலிய பணய கைதிகளை விடுவிக்கவும், காசாவில் போர் நிறுத்தவும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தானுக்கான சிறப்பு தூதராக உள்ள ஜிதேந்திர சிங்கை, இஸ்ரேலுக்கான சிறப்பு தூதராக இந்தியா நியமித்துள்ளது. ஜிதேந்திர சிங்கை பொறுத்தவரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் இணை செயலாளராக இருந்திருக்கிறார்.
இதனால் ஜிதேந்திர சிங் விரைவில் இஸ்ரேல் தூதராக டெல் அவிலில் விரைவில் பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இஸ்ரேலுக்கான இந்தியாவின் தூதராக இருந்த சஞ்சீவ் சிங்லா, தற்போது பாரிஸ் தூதராக செயல்பட்டு வருகிறார். மேலும் இஸ்ரேலியில் ஜிதேந்திர சிங் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதன் மூலமாக இருதரப்புகளுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவில் முக்கியமானதானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications