எதிர்பாரா நேரத்தில் சீனாவுக்கு இந்தியா வைத்த ஆப்பு! டிரம்பை விடுங்க, மத்திய அரசு செய்த தரமான சம்பவம்
பீஜிங்: சீனாவில் இருந்து இறக்குமதியாகும் சில பொருட்களுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரியை மத்திய அரசு விதித்துள்ளது. சீனாவில் இருந்து மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படுவதால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதால் சீன பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய உற்பத்தி சந்தையாக சீனா உருவெடுத்து வருகிறது. எலக்ட்ரானிக் பொருட்கள் முதல் சாதாரண பொம்மை விளையாட்டு சாமான்கள் வரை சீனா ஏற்றுமதி செய்யாத பொருட்களே இல்லை என சொல்லும் அளவுக்கு கிட்டதட்ட அனைத்து விதமான பொருட்களையும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

சீனாவின் 4 பொருட்களுக்கு வரி விதிப்பு
மலிவு விலையில் சீன பொருட்கள் கிடைப்பதால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இந்தியாவில் வியாபாரிகள் மத்தியில் உள்ளது. இதனால் சீன பொருட்கள் கட்டுக்கடங்காமல் வருவதற்கு கடிவாளம் போடப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு கட்டுப்பாடுகளும் உள்ளன.
இந்த நிலையில்தான், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4 பொருட்களுக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரியை விதித்துள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்க், அலுமினியம்ஃபாயில் பேப்பர், ட்ரைக்ளோரோ ஐசோசயனூரிக் அமிலம், பாலி வினைல் குளோரைடு பேஸ்ட் ரெசின் ஆகிய 4 பொருட்களுக்குதான் இந்த வரியானது விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிப்பு
சீனாவில் இருந்து மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படுவதால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிப்பு உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க சீன பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அலுமினியம் பாயில் பொருட்களுக்கு ஒரு டன்னுக்கு 873 டாலர் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆசிட் பொருளுக்கு 276 டாலரில் இருந்து 986 டாலராக ஒரு டன்னுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்கள், சார்ஜர்கள், டெலிகாம் சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் சாஃப்ட் பெரைட் கோர்ஸ்களுக்கு 35 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்க்கிற்கு ஒரு டன் 1,732 டன் வரி விதிக்கப்பட்டுள்ளது. சீனா, தென்கொரியா, நர்வே, தைவான், ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பாலி வினைல் குளோரைடு பேஸ்ட் ரெசின் பொருட்களுக்கான வரி டாலர் 89 முதல் 707 ஒரு டன்னுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
பொருள் குவிப்பு தடுப்பு வரி என்றால் என்ன
பொருள் குவிப்பு தடுப்பு வரி என்பது உலக வர்த்த சபை விதிகளின்படி இந்தியா போட்டுள்ளது. நியாயமான வர்த்தக நடைமுறைகள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சம வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த வரியானது போடப்படுகிறது. ஜெனிவாவில் உள்ள உலக வர்த்தக சபையில் மேற்கொள்ளப்பட்ட பொது ஒப்பந்தம் ஆர்டிகிள் 6 கீழ் நாடுகள், இந்த பொருள் குவிப்பு வரியை போட்டுக்கொள்ள முடியும்.
அமெரிக்க வரி விதிப்பு நெருக்கடிக்கு மத்தியில் சீன பொருட்கள் மீது இந்தியா விதித்து இருக்கும் இந்த வரி, சீனாவுக்கு பெருத்த அடியாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, சர்வதேச அளவில் டிரம்ப் விதிக்கும் வரி விதிப்பு கொள்கையால் சீனாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவுடன் மோதவும் தயார் என்று சீனா வெளிப்படையாகவே கூறியுள்ளது.
அதாவது, பொருளாதார போராக இருந்தாலும் சரி, வேறு எந்த விதமான போராக இருந்தாலும் சரி.. அமெரிக்காவுடன் மோத தயார் என்று சீனா அறிவித்து இருந்தது. உலகின் இரண்டாவது பொருளாதார நாடாக உள்ள சீனாவின், இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார கூட்டாளியாக இந்தியா உள்ளது. 2023-24 ஆம் நிதி ஆண்டில் மட்டும் 85 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications