அமெரிக்காவின் முற்றுகைக்கு பிறகு துணிச்சலாக ஹார்முஸ் நீரிணையை கடந்த முதல் இந்தியக் கப்பல்!
ஹார்முஸ்: இந்தியாவுக்குச் சொந்தமான Sarv Shakti கப்பல், 45,000 டன் எல்பிஜி ஏற்றிக்கொண்டு ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாக கடந்துள்ளது. ஈரானுக்கு எதிராக ஏப்ரல் 13 ஆம் தேதி அமெரிக்கா முற்றுகையைத் தொடங்கிய பிறகு, இந்த ஆபத்தான கடற்பாதையை துணிச்சலுடன் கடந்து சென்ற முதல் இந்தியக் கப்பல் இது. இது இந்திய கடற்போக்குவரத்து துறையின் முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.
ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம், அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை படுகொலை செய்தது. அதைத்தொடர்ந்து வளைகுடா பிராந்தியம் முழுவதும் மூண்டுள்ள போரில் ஈரானில் ஏராளமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் அரசு மற்றும் ராணுவத்தின் முக்கிய தலைவர்களும் உயிரிழந்து உள்ளனர்.

அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதற்கென தனி நடைமுறையை அமல்படுத்தும் திட்டத்தில் இருந்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீரான போக்குவரத்து நடைபெற வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது.
அமெரிக்கா- ஈரான் இடையிலான சமூக பேச்சுவார்த்தை நடைபெற்று உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் சுமூகமாக சென்று வர ஈரான் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், ஈரானுக்கு கட்டணம் செலுத்த கப்பல் நிறுவனங்கள் முன்வந்தால், அந்த நிறுவனங்களை தடையை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்கா உடனான போரால் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. பின்னர், இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சில கப்பல்கள் பாதுகாப்பான வகையில் செல்ல கட்டணம் வசூலித்தது. இந்த நிலையில்தான் கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையற்ற போக்குவரத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, தேஷ் கரிமா என்ற கச்சா எண்ணெய் கப்பல் ஏப்ரல் 18 அன்று ஜலசந்தியைக் கடந்தது. ஆனால், சிறிது நேரத்திலேயே மீண்டும் போக்குவரத்தை மூடுவதாக ஈரான் அறிவித்தது. அதே நாளில் இரண்டு இந்தியக் கப்பல்களும் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளானதால், அவையும் இந்தியாவை நோக்கிச் சென்ற மற்ற கப்பல்களும் பாரசீக வளைகுடாவிற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
'சர்வ சக்தி' என்ற LPG கப்பல், 45,000 டன் எல்பிஜி ஏற்றிக்கொண்டு ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாக கடந்துள்ளது. ஈரானுக்கு எதிராக ஏப்ரல் 13 ஆம் தேதி அமெரிக்கா முற்றுகையைத் தொடங்கிய பிறகு, இந்த ஆபத்தான கடற்பாதையை துணிச்சலுடன் கடந்து சென்ற முதல் இந்தியக் கப்பல் இது. இது இந்திய கடற்போக்குவரத்து துறையின் முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.
மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து இதுவரை, இந்தியக் கொடியை ஏந்திய 10 எரிசக்தி கப்பல்கள்-ஒன்பது எல்.பி.ஜி. கப்பல்கள் மற்றும் ஒரு கச்சா எண்ணெய் கப்பல்-ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்துள்ளன. மேலும், சில வெளிநாட்டுக் கொடியை ஏந்திய எரிசக்தி கப்பல்களும் ஜலசந்தியைக் கடந்து பாரசீக வளைகுடாவிலிருந்து வந்தடைந்தன.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications