துருக்கி ஏவியேஷன் நிறுவனத்திற்கான பாதுகாப்பு அனுமதி ரத்து! மத்திய அரசு அதிரடி
டெல்லி: துருக்கியின் செலெபி ஏவியேஷன் எனும் நிறுவனம் இந்தியாவில் 9 விமான நிலையங்களில் சரக்குகளை கையாள்கிறது. இதற்கு பாதுகாப்பு அனுமதி அவசியம். இதனை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. இதன் மூலம் தனது பணியை இந்நிறுவனம் இழக்கலாம்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டிருந்தது. இந்த ட்ரோன்கள் துருக்கி கொடுத்ததாகும். எனவேதான் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

இந்தியாவில் சென்னை, மும்பை உட்பட சுமார் 9 விமான நிலையங்களில் சரக்குகளை கையாள்வது உள்ளிட்ட உயர் பாதுகாப்பு கொண்ட பணிகளை இந்நிறுவனம் செய்து வருகிறது. இந்நிறுவனம் 1958ம் ஆண்டு நிறுவப்பட்டிருக்கிறது. மொத்தம் 3 கண்டங்களில் 6 நாடுகளில் 70 விமான நிலையங்களில் இந்த பணிகளை செய்து வருகிறது. இதில் 15,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வெறுமென பயணிகளின் உடமைகள் மட்டுமல்லாது, விமானம் எங்கு வந்து நிற்க வேண்டும் என்பது உட்பட இந்நிறுவன ஊழியர்கள்தான் வழிக்காட்டுவார்கள்.
மும்பை, டெல்லி, கொச்சின், கண்ணூர், பெங்களூரு, ஹைதராபாத், கோவா மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களில் இந்நிறுவனம் சேவை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் மொத்த பங்கில் 10% துருக்கி அதிபர் எர்டோகன் வசம் இருப்பதாகவும் சந்தேகம் எழுந்திருக்கிறது. இதில் வேலை செய்யும் ஊழியர்கள் விமானத்திற்கு மிக நெருக்கமா இருப்பார்கள். இது மிகவும் ஆபத்தானது என்பதால் இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கிளியரன்ஸ் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
செக்யூரிட்டி கிளியரன்ஸ் மிக முக்கியம். இது இருந்தால் மட்டுமே இந்த பணி மேற்கொள்ள அனுமதிப்படும். இப்போது இதனை மத்திய அரசு ரத்து செய்திருப்பதால், துருக்கி நிறுவனத்திற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் சுமார் 300க்கும் அதிகமான ட்ரோன்களை அனுப்பியது. இவை அனைத்தையும் இந்திய ராணுவம் முறியடித்தது என்பது தனிக்கதை. இந்த ட்ரோன்கள் அனைத்தும் துருக்கியின் 'அசிஸ்கார்டு சோங்கர்' எனறும் வகையை சேர்ந்தது. தீவிரவாத்திற்கு எதிராக இந்தியா உறுதியாக களத்தில் இருக்கும் நிலையில், நமக்கு உதவாமால் பாகிஸ்தானுக்கு துருக்கி உதவியிருந்தது. இதன் மூலம் இந்தியாவுடன் எந்தெந்த நாடுகள் பக்க பலமாக நிற்கின்றன என்பதும் தெரிய வந்தது.
இந்த சம்பவத்திற்கு பிறகு இந்திய சுற்றுலா பயணிகள் துருக்கிக்கு செல்வதை தவிர்த்தனர். சுமார் 60% வரை இந்திய சுற்றுபயணிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு துருக்கிக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை எடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications