LPG விநியோகத்தில் மிகப்பெரிய மாற்றம்.. இனி சட்டென டெலிவரி.. ரூ.12500 கோடி மெகா திட்டம்!
நாடு முழுவதும் கோடிக்கணக்கான வீடுகளில் தினசரி பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு (எல்பிஜி) இப்போது ஒரு புதிய பாதையில் பயணிக்கத் தயாராக உள்ளது. இதுவரை டிரக் மற்றும் டேங்கர் வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வந்த எல்பிஜி, இனி பைப்லைன் வழியாக வேகமாகவும், பாதுகாப்பாகவும் வீடுகளைச் சென்றடையும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (PNGRB) இந்தியாவில் 4 முக்கிய வழித்தடத்தில் பைன்லைன் மூலம் எரிவாயு சப்ளை செய்யும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த நான்கு முக்கிய பைப்லைன் அமைக்க ஒப்பந்த நிறுவனங்களை தேர்வு செய்யும் கட்டத்தில் இத்திட்டம் உள்ளது.

இந்த 4 பைப்லைன் திட்டங்களின் மொத்த நீளம் சுமார் 2,500 கிலோமீட்டர் ஆகும், தெலுங்கானாவின் செர்லபள்ளி முதல் நாக்பூர் வரை, மகாராஷ்டிராவின் ஷிக்ராபூர் முதல் ஹப்ளி வழியாக கோவா வரை, ஒடிசாவின் பரதீப் முதல் ராய்பூர் வரை, ஜான்ஸி முதல் சித்தார்கஞ்ச் வரை என 4 முக்கிய பாதைகளில் எரிவாயு சப்ளைக்கான பைப்லைன் அமைக்கப்படும். இந்தப் பைப்லைன்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு அரசு சுமார் 12,500 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. மொத்தம் ஒன்பது எல்பிஜி பைப்லைன் திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்த காணப்பட்டுள்ளன. இது இந்தியாவின் எரிசக்தி உள்கட்டமைப்பை நவீனப்படுத்தும் ஒரு பெரிய திட்டத்தின் முக்கிய பகுதியாகும்.
தற்போது எல்பிஜி நாட்டின் பெரும்பகுதியில் சாலை வழியாக டேங்கர் வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த முறை மிகவும் மெதுவானது அதேநேரத்தில் அதிக செலவு கொண்டது மற்றும் பாதுகாப்பு அபாயங்களை உள்ளடக்கியது. சாலை விபத்துகள் அடிக்கடி நடைபெறுவதால் இழப்புகள் அச்சமும் உள்ளது.
இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் பைப்லைன் முறைக்கு மாறுவது மூலம் மக்களுக்கு தேவையான எல்பிஜி டெலிவரியை வேகப்படுத்த முடியும், இதேவேளையில் பாதுகாப்பு, நிலையான சப்ளை செயினை உருவாக்க முடியும். இவை அனைத்தையும் விட முக்கியமாக செலவுகளை குறைக்க முடியும்.
தற்காலிக சேமிப்பு
இந்த பைப்லைன்கள் சுமார் 2500 கிலோமீட்டருக்கு அமைக்கப்படுகிறது. இது வெறும் போக்குவரத்து குழாய்கள் மட்டுமல்ல, இவை அவசரகாலத்தில் தற்காலிக சேமிப்பு அமைப்பாகவும் செயல்படும். உற்பத்தியில் தடங்கல் ஏற்பட்டாலும் அல்லது இறக்குமதியில் பிரச்சனை வந்தாலும் பைப்லைன்கள் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும்.
மேலும் இந்த 4 முக்கிய பைப்லைன் எல்பிஜி உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிப்பு நிலையங்கள், இறக்குமதி துறைமுகங்கள் மற்றும் சிலிண்டர் நிரப்பும் ஆலைகள் ஆகியவை இந்தப் பைப்லைன் நெட்வொர் மூலம் நேரடியாக இணைக்கப்படும். இதனால் உற்பத்தியில் இருந்து இறுதி நுகர்வோர் வரை மலிவான போக்குவரத்தில் செவவில் எல்பிஜி விநியோகம் செய்யப்படும்.












Click it and Unblock the Notifications