வங்கதேசத்தின் படை பலம் என்ன? போர் விமானம், போர்க்கப்பல் எத்தனை? இந்தியாவுடன் போரிட்டால் வெல்லுமா?
டாக்கா: இந்தியாவுடன், வங்கதேசம் மோதலை தொடங்கி வருகிறது. எல்லை பகுதியில் நம் நாட்டுடன் வங்கதேச வீரர்கள் மோதலுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வங்கதேச படை பலம் என்ன? அவர்கள் வைத்திருக்கும் போர் விமானம் மற்றும் போர் கப்பல்கள் எத்தனை? இந்தியாவுடன் போரை தொடங்கினால் வங்கதேசத்தால் வெல்ல முடியுமா? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்துக்கு நம் ராணுவ வீரர்கள் தான் பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் வாங்கி கொடுத்தோம். அதனால் தான் இன்று வங்கதேசம் என்ற நாடே உள்ளது. ஆனால் அதனை மறந்து தற்போது நம்முடன் வங்கதேசம் மோதலை தொடங்கி உள்ளது.

வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் தான் இந்த மோதலுக்கு காரணமாகும். ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்த பிறகே இருநாடுகள் இடையேயான மோதல் என்பது வலுக்க தொடங்கி உள்ளது.
இந்தியா - வங்கதேசம் இடையேயான மேற்கு வங்க எல்லையில் பதற்றத்தை உருவாக்குவதோடு, ட்ரோன்களை பறக்கவிட்டு நம் நாட்டை வங்கதேசம் உளவு பார்க்கிறது. அதோடு எல்லையில் பதுங்கு குழிகளையும் வங்கதேசம் தோண்டுவதாக சொல்லப்படுகிறது. இதுதவிர சிட்டகாங்கில் ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளது. அடுத்த மாதம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வங்கதேசம் சென்று அந்த நாட்டு ராணுவத்துக்கு பயிற்சி வழங்குகின்றனர். அதோடு தனது ராணுவபலத்தை அதிகரிக்கும் வகையில் பாகிஸ்தானிடம் ஏவுகணை, துருக்கியிடம் டேங்குகள், சீனாவிடம் ஜே-10 போர் விமானங்களை கொள்முதல் செய்ய வங்கதேசம் தயாராகி வருகிறது.
இதனால் வங்கதேசம் நம் நாட்டுடன் நேரடி மோதலுக்கு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. சரி இது இருக்கட்டும். வங்கதேசம் நம் நாட்டுடன் மோதி போரை தொடங்கினால் என்ன நடக்கும்? அந்த நாட்டின் ராணுவ பலம் என்ன? என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதாவது நம் நாட்டை ஒப்பிடும்போது வங்கதேசம் ராணுவ கட்டமைப்பில் பலம் குறைந்து காணப்படுகிறது. Global Firepower Index 2025 நிலவரப்படி மொத்தம் 145 நாடுகள் ராணுவ கட்டமைப்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் வங்கதேசம் 35வது இடத்தில் உள்ளது. நம் நாடு 4வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்ததாக நம் நாடு தான் 4வது இடத்தில் உள்ளது.
வங்கதேசத்தை பொறுத்தவரை பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் என்பது 3.6 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. ஆனால் நம் நாட்டு பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் என்பது 75 பில்லியன் அமெரிக்க டாலராக அதாவது 6.22 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 4.79 சதவீதம் அதிகமாகும். வங்கதேசத்தை பொறுத்தவரை தற்போது ராணுவத்தில் 1 லட்சத்து 63 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர். துணை ராணுவப்படையில் 6 லட்சத்து 80 ஆயிரம் பேர் உள்ளனர். இந்திய ராணுவத்தை எடுத்து கொண்டால் பணியாளர்கள் அடிப்படையில் உலகின் 2வது இடத்தில் உள்ளது. அதாவது 14 லட்சம் வீரர்கள் ராணுவ பணியில் உள்ளனர்.
வங்கதேசத்திடம் 320 டேங்குகள் உள்ளன. 27 Self Propelled Artillery units, 437 towed artillery units உள்ளன. 71 மல்டிபிள் லாஞ்ச் ராக்கெட் சிஸ்டம் உள்ளது. விமானப்படையை எடுத்து கொண்டால் 44 போர் விமானங்கள் உள்ளன. வீரர்களின் போக்குவரத்துக்காக 16 விமானங்கள் உள்ளன. 87 பயிற்சி விமானங்கள் உள்ளன. ஹெலிகாப்டரை எடுத்து கொண்டால் மொத்தம் 73 ஹேலிகாப்டர்கள் மட்டுமே உள்ளன. இந்த ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி எந்த தாக்குதலையும் நடத்த முடியாது. போக்குவரத்து, அவசர கால மீட்பு பணிகளுக்கு மட்டுமே இந்த ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடியும்.
கடற்படையை எடுத்து கொண்டால் 7 போர்க்கப்பல்கள் (frigates), 6 கோர்வெட்ஸ்கள் (Corvettes) உள்ளன. 2 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இந்த நீர்மூழ்கி கப்பல்கள் சீனாவின் தயாரிப்பாகும். இந்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் வங்கதேசத்தை ஒப்பிடும்போது நம் நாடு ராணுவம், கப்பற்படை, விமானப்படையில் பலமாக உள்ளது. வங்கதேசத்திடம் இல்லாத அதிநவீன ஆயுதங்கள், ஏவுகணைகள், போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் நம் நாட்டிடம் உள்ளது. அதோடு வங்கதேசத்தை உருவாக்குவது, கார்கில் போர் என்று பாகிஸ்தானுக்கு எதிராக நம் நாட்டுக்கு போர் புரிந்த அனுபவம் உள்ளது. இது நம் நாட்டு வீரர்களுக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்டாக மாறும்.
வங்கதேசத்தை எடுத்து கொண்டால் போர் புரிந்த அனுபவம் கிடையாது. ஏன்.. கிழக்கு பாகிஸ்தானாக பாகிஸ்தானுடன் இருந்த வங்கதேசமே உருவாக நம் ராணுவ வீரர்கள் தான் உதவி செய்தனர். நம் நாட்டு வீரர்கள் தான் பாகிஸ்தான் ராணுவத்தின் மூக்கை உடைத்து சரணடைய வைத்து வங்கதேசத்தை உருவாக்கினர். இதனால் நம் நாட்டை ஒப்பிடும்போது வங்கதேசத்தின் படைபலம், ராணுவ கட்டமைப்பு, போர் புரியும் தன்மை உள்ளிட்டவை ரொம்ப வீக்காக உள்ளது. நம் நாட்டை பொறுத்தவரை எந்த நாட்டுடனும் போர் புரிய விரும்புவது இல்லை. இணக்கமாக செல்ல தான் எப்போதும் நாம் விரும்புவோம். ஆனால் முஷ்டி முறுக்கி கொண்டு ஏதேனும் நாடு வந்து மோதினால் உரிய முறையில் பதிலடி கொடுக்கவும் நாம் தயங்கமாட்டோம். இதனால் வங்கதேசம் நம்மிடம் போரிட்டால் எளிதில் நம் நாட்டால் வீழ்த்தப்படுவார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா!












Click it and Unblock the Notifications