For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினர் தேர்தலில் இந்தியா வெற்றி- 8வது முறையாக இடம்

Google Oneindia Tamil News

ஜெனிவா: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தரம் இல்லாத உறுப்பினர் இடத்துக்கான தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தரம் இல்லாத உறுப்பினராக 8-வது முறை இந்தியா இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தரமல்லாத உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிரந்தரம் இல்லாத உறுப்பினர்கள் இடங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 10 நாடுகள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படும்.

India set to win unopposed UNSC’s non-permanent member seat

இந்த தேர்தலில் ஆசிய பசிபிக் குழுவின் வேட்பாளராக இந்தியா போட்டியிட்டது. மொத்தம் 55 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்தன. இதனால் இந்தியா வெல்வது உறுதியாகி இருந்தது.

இந்திய நேரப்படி புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது. இரவு 11 மணிவரை இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா சபையில் முதல் முறையாக சமூக இடைவெளியுடன் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இந்தியா பதிலடி.. சீனாவின் முக்கிய அதிகாரி உட்பட 35 ராணுவ வீரர் பலி.. அமெரிக்க உளவுத்துறை தகவல்

பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 192 நாடுகளில் 184 நாடுகளின் வாக்குகளை இந்தியா பெற்றது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தரம் இல்லாத உறுப்பினராக 8-வது முறை இந்தியா இடம்பெற்றுள்ளது.

India wins unopposed UNSC’s non-permanent member seat

கடந்த 2010-ம் ஆண்டு இந்தியா 187 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது இந்தியா. 2011-ம் ஆண்டு 7-வது முறையாக நிரந்தரமல்லாத உறுப்பினராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம்பெற்றது. இதற்கு முன்னர் 1950-51; 1967-68; 1972-73; 1977-78; 1984-1985; 1991-1992 ஆகிய ஆண்டுகளிலும் நிரந்தரமல்லாத உறுப்பினர் நாடாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம்பெற்றிருந்தது.

English summary
India will win unopposed UNSC’s non-permanent member seat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X