For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க செனட் தேர்தல்.. ட்ரம்ப் கட்சி சார்பில் இ-மெயில் கண்டுபிடித்த தமிழர் சிவா ஐயாத்துரை போட்டி

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள செனட் சபை உறுப்பினர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் சிவா ஐயாத்துரை போட்டியிட முடிவு செய்துள்ளார்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க செனட் சபை தேர்தலில் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சி சார்பில் தமிழரான சிவா ஐயாத்துரை போட்டியிட உள்ளார். இவர் இமெயிலை கண்டுபிடித்த தமிழர் என்று அழைக்கப்படுபவராகும்.

சிவா ஐயாத்துரை சைட்டோசல்வ் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள செனட் சபை உறுப்பினர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் சிவா ஐயாத்துரை போட்டியிட முடிவு செய்துள்ளார். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் எலிசபெத் வாரென்னை எதிர்த்து அவர் களமிறங்க இருக்கிறார்.

அமெரிக்காவில் தற்போது வசித்து வரும் சிவா ஐயாத்துரை சைட்டோசல்வ் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தன்னுடைய 7 வயதில் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார் ஐயாத்துரை. தற்போது முன்னனி தொழில் முனைவராக உள்ளார்.

இ-மெயிலை கண்டுபிடித்தார்

இ-மெயிலை கண்டுபிடித்தார்

இதில் சுவாரசியமான ஒரு விஷயம் என்னவென்றால், இன்று உலகையே உள்ளங்கைக்குள் கொண்டுவர அச்சாரமாக இருந்த இ-மெயில் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் இந்த சிவா ஐயாத்துரைதான். இ-மெயிலைக் கண்டுபிடித்த தமிழன் என்றுதான் இவரை தமிழ்கூறும் நல்லுலகு நினைவு வைத்துள்ளது.

தமிழர்

தமிழர்

சிவா ஐயாத்துரை மும்பையில் பிறந்த தமிழர். ஏழு வயதிலேயே இவர் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுவிட்டார். நியூ ஜெர்சியில் உள்ள லிவிங்ஸ்டன் மேல்நிலை பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது தான் இவர் மின்னஞ்சல் இயக்கம் குறித்து நியூ ஜெர்சி பல்கலைக்கழகத்திற்காக பணியாற்றினார்.

பெரிய கண்டுபிடிப்பு

பெரிய கண்டுபிடிப்பு

சிவா ஐயாத்துரையின் அப்பா, ராஜபாளையத்தை சேர்ந்தவர், அம்மா, தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அடுத்த, பரமன்குறிச்சியைச் சேர்ந்தவர். இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், டிராப்ட், ஃபோல்டர், அட்ரஸ் புக் அடங்கிய அடங்கிய மின்னஞ்சல் இயக்கத்தை கண்டுபிடித்து சாதித்தது அமெரிக்காவிலாகும்.

கோபம்

கோபம்

அதேநேரம், இவரது திறமைக்கு மேற்கத்திய உலகில் உரிய அங்கீகாரம் தராமல் மறக்கடிக்கப்பட்டார். இதை சமீபத்திய ஒரு பேட்டியின்போது கோபமாக வெளிப்படுத்தியிருந்தார் சிவா ஐயாத்துரை.

இன வெறி

இன வெறி

"அமெரிக்காவை சேர்ந்த ரே டாம்லின்ஸ்டன் தான் மின்னஞ்சல் தந்தை என அழைக்கப்படுகிறார். ஆனால், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ஃபோல்டர், மெமோ, அட்டாச்மெண்ட், அட்ரஸ் புக், ரிப்ளை, ஃபார்வர்டு போன்ற அம்சங்கள் அடங்கிய மின்னஞ்சலை உருவாக்கியது நான் தான். நிறவெறி காரணமாக என்னை மேற்கத்திய ஊடகங்கள் பின்தள்ளிவிட்டன என்று குற்றம் சாட்டியிருந்தார்" சிவா ஐயாத்துரை.

English summary
Prominent Boston-based Indian-American entrepreneur, VA Shiva Ayyadurai will challenge powerful Democratic Senator and liberal icon Elizabeth Warren in the Senate race next year from the US state of Massachussets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X