நபிகள் நாயகம் குறித்து விமர்சனம்- பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்துட்டோம்- மலேசியாவிடம் இந்தியா
கோலாலம்பூர்: நபிகள் நாயகம் பற்றிய பாஜக மூத்த தலைவர்களின் அவதூறு விவகாரத்தில் மலேசிய வெளியுறவு அமைச்சகத்திடம் அந்நாட்டுக்கான இந்திய தூதர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் பாஜக தலைவர்களின் கருத்துகள் இந்திய அரசின் கருத்துகள் அல்ல எனவும் இந்திய தூதர் கூறியுள்ளார்.
பாஜகவின் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் இருவரும் டிவி மற்றும் சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளை பேசினர்; பதிவிட்டனர். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இதுவரை இல்லாத வகையில் பாஜகவினரின் இந்த விமர்சனம் சர்வதேச விவகாரமாக வெடித்திருக்கிறது. இஸ்லாமிய நாடுகள் பெரும்பாலும் பாஜக தலைவர்களின் கருத்துகளுக்காக இந்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனால் வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் உறவில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக மத்திய அரசு பல்வேறு விளக்கங்களை அளித்திருக்கிறது. அத்துடன் பாஜகவில் இருந்து நுபுர் சர்மா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். நவீன் ஜிண்டால் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். ஆனாலும் இந்த விவகாரம் இப்போதைக்கு ஓய்வதாக இல்லை.
இந்த நிலையில் நபிகள் நாயகம் குறித்த அவதூறுக்காக இந்திய தூதர் விளக்கம் அளிக்க மலேசியா அரசு சம்மன் அனுப்பியது. மேலும் முஸ்லிம் சமூகத்தினரிடையே அதிருப்தியையும் கோபத்தையும் எற்படுத்தும் வகையில் பேசிய தலைவர்களை பாஜக நீக்கும் முடிவை மலேசியா வரவேற்கிறது. அமைதியை ஏற்படுத்த, ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் மலேசியா கூறியிருந்தது.
Recommended Video

இதனிடையே மலேசிய வெளியுறவு அமைச்சகத்தின் சம்மனை ஏற்று அந்நாட்டுக்கான இந்திய தூதர் பி.என்.ரெட்டி, நபிகள் நாயகம் அவதூறு சர்ச்சை குறித்து நேரில் சென்று விளக்கம் அளித்தார். அதில், பாஜகவினரின் கருத்துகள் இந்திய அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என சுட்டிக் காட்டியிருந்தார். மேலும் அனைத்து மதங்களையும் இந்திய அரசு உயர்வாகவே மதிக்கிறது. இஸ்லாம் குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பி.என்.ரெட்டி கூறினார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
16 வயசு பிள்ளைங்களுக்கு ஷாக்.. இனி இன்ஸ்டா யூஸ் பண்ண முடியாது! அதிரடியாக உத்தரவிட்ட அரசு! என்னாச்சு? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications