போதை மருந்து கொடுத்து 5 கொரிய பெண்கள் பலாத்காரம்.. பாஜக முன்னாள் பிரமுகர் மீது புகார் நிரூபணம்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் 5 கொரிய பெண்களுக்கு போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவத்தில் குற்றவாளி என நிரூபணமாகியுள்ளது.
பாஜகவின் வெளிநாடு வாழ் நண்பர்களின் முன்னாள் தலைவராக இருந்தவர் பலேஷ் தன்கர். 43 வயதாகும் இவர் 5 கொரிய பெண்களுக்கு போதை மருந்தை கொடுத்ததாக தெரிகிறது. அவர்கள் மயங்கி தள்ளாடியதை பயன்படுத்திக் கொண்ட பலேஷ் அவர்களை பலாத்காரம் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் இவர் மீது ஏராளமான பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்களுடன்தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து தனது செல்போனில் வைத்திருந்தாராம். அதை போலீஸார் கைப்பற்றினர்.
அந்த வீடியோக்களில் பலேஷ் தன்னை நம்பி வரும் பெண்களுக்கு போதை மருந்தை கொடுக்கிறார். அதில் மயங்கும் பெண்களை பலாத்காரம் செய்கிறார். பின்னர் அலாரம் கடிகாரம் மற்றும் செல்போன் ஆகியவற்றின் பின்புறம் மறைத்து வைத்திருந்த தனது கேமராவில் வீடியோவும் எடுத்துக் கொள்கிறார். அவ்வாறு போலீஸார் ஏராளமான வீடியோக்களை கைப்பற்றியுள்ளனர்.
அந்த வீடியோக்களில் ஒரு வீடியோவானது 95 நிமிடங்களுக்கு ஓடக் கூடியது. அதில் மயங்கி கிடந்த பல பெண்களுடன் பலேஷ் உறவு வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது 39 வழக்குகள் அவர் மீது தனித்தனியே பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் கண்கலங்கினார். மேலும் பல்வேறு பொய்களை கூறி 5 கொரிய பெண்களை அழைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உறுதியாகியுள்ளது என தீர்ப்பளித்தனர். இவர் மே மாதம் மீது ஆஜர்படுத்தப்படுவார்.
இதன் பிறகு இந்த ஆண்டு அவருக்கு தண்டனை வழங்கப்படும் என தெரிகிறது. இதுகுறித்து பலேஷிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தியதில் அவர் அழுதபடியே நான் பெண்களிடம் நிறைய பொய்களை கூறியுள்ளேன். எனது திருமண வாழ்க்கை கசப்பாக இருந்ததால் நான் வேறு ஒருபெண்ணுடன் தொடர்பில் இருந்தேன்.
ஆனால் அந்த பெண்ணும் என்னை ஒரு சிறிய பிரச்சினைக்காக விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதனால் நான் தனிமையில் வாடியதால் பெண்களிடம் நான் பொய் கூறியதாக கண்ணீர் மல்க கூறினார். சில நேரங்களில் மயக்கமடையும் பெண்களை பலாத்காரம் செய்யும் பலேஷ் பல சமயங்களில் போதை மருந்து கொடுத்து மயங்காத பெண்களை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்த சம்பவங்களும் நடந்துள்ளன.
பலேஷ் கொரிய பெண்களை பலாத்காரம் செய்து எடுத்த வீடியோக்களை தனித்தனியே ஃபோல்டர் போட்டு வைத்த்துள்ளார். அதில் சம்பந்தப்பட்ட கொரிய பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள்தான் என்று பலேஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும் மயக்கத்தில் இருப்போரையும் தள்ளாடியபடி இருப்போரையும் எதுவும் செய்ய முடியாது என்றும் பலேஷ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பலேஷ் பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தார் என்பது நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். இந்த சம்பவத்தை விவரித்த நாளேடுகள் ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமான பாலியல் குற்றவாளிகளில் பலேஷும் ஒருவர் என விவரித்துள்ளன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications