Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டிடங்கள்.. அலறியடித்து வீதிகளுக்கு ஓடிய மக்கள்! வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இருந்து வாடிக்கையாளர்கள் அலறியபடி ஓடும் காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. சூப்பர் மார்க்கெட்டில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் வரிசையாக கீழே விழுவதையும் பார்க்க முடிகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக என்ற அளவிற்கு மிகக்கடுமையான அளவுக்கு நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின.

Indonesia earthquake Powerful 7 8 Magnitude Earthquake Shakes Indonesia Residents Flee as Buildings Tremble

சக்திவாய்ந்த நிலநடுக்கம் - வீடியோ

காலை 6.45 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த மக்கள் பலரும் திடுக்கிட்டு எழுந்தன. கட்டிடங்கள் குலுங்கியதை பார்த்து மக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வீதிகளுக்கு வந்தன. கட்டிடங்கள் பல இடங்களில் சேதம் அடைந்தன.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானார். நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கும் காட்சிகள் வீடியோக்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. நிலநடுக்கத்தால் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இருந்து வாடிக்கையாளர்கள் அலறியபடி ஓடும் காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

1,000 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு

சூப்பர் மார்க்கெட்டில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் வரிசையாக கீழே விழுவதையும் பார்க்க முடிகிறது. நிலநடுக்கத்தின் தீவிரத்தை காட்டும் விதமாக இந்தக் காட்சிகள் அமைந்துள்ளன. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு 2 மணி நேரம் கழித்து அது விலக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ், மலேசியா வரை சுமார் 1000 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சுனாமி அலைகள் எழக்கூடும் என்று எச்சரிக்கை முதலில் விடுக்கப்பட்டு இருந்தது.

2,30,000 பேர் உயிரிழந்தனர்

இதனால் தென்கிழக்கு ஆசியாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ரிக்டர் அளவில் 9.3 புள்ளிகள் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கடலில் சுனாமி ஏற்பட்டது. தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளை சுனாமி தாக்கியது. இதில், 2,30,000 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் மட்டும் 2,758 பேர் பலியாகினர். இந்த கோர சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில், இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+