நடுவானில் தொடர்பை இழந்த இந்தோனேசிய விமானம்.. 11 பேரின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
ஜகர்தலா: இந்தோனேஷியாவில் 11 பேருடன் சென்ற விமானம் நடுவானில் தொடர்பை இழந்துள்ளது. அரசு அதிகாரிகள், 7 விமான சிப்பந்திகள் என 11 பேருடன் சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால் விபத்தில் சிக்கியுள்ளதோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் அரசு அதிகாரிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகளுடன் சென்ற விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இந்தோனேஷியாவின் யோகியாகர்தாவில் இருந்து சுலவேஸி தீவில் உள்ள மகாஸர் தீவுக்கு கண்காணிப்பு விமானம் சென்று கொண்டிருந்தது.

இந்த விமானத்தில் கடல் சார் அமைச்சகத்தின் மூன்று அதிகாரிகள் மற்றும் விமான சிப்பந்திகள் என மொத்தம் 11 பேர் பயணம் செய்துள்ளனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து, விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மலைப்பகுதி நிறைந்த இடத்தில் விமானம் தொடர்பை இழந்ததால் விபத்தில் சிக்கியதா என்ற அச்சம் எழுந்துள்ளது. விமானத்தை வான்வழியாகவும் தரைப்பகுதியிலும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஹெலிகாப்டர் மற்றும் டிரோன்கள் உதவியுடன் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மாயமாகியுள்ள இந்த விமானம், பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான ஏடிஆர் விமான நிறுவனம் தயாரித்தது என்றும் அதிகாரிகள் கூறினர். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா ஆயிரக்கணக்கான தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடு ஆகும். ஒரு தீவில் இருந்து மற்றொரு தீவுக்கு செல்ல மக்கள் அதிக அளவில் விமான பயணத்தையே நம்பியுள்ளனர்.
இதனால், அங்கு எப்போதும் விமான போக்குவரத்து பரபரப்பாக காணப்படுவதை பார்க்க முடிகிறது. அதேநேரத்தில் இந்தோனேஷியாவில் மோசமான பல விமான விபத்துகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறு பயணிகள் மற்றும் 2 விமான சிப்பந்திகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் பயணிகள் அனைவருமே பலியாகினர். இந்த்ந விபத்து நடைபெற்ற இரண்டு வாரங்களில் மற்றொரு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications