For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10 ஆயிரம் அமெரிக்கர்களுக்கு வேலை... ட்ரம்பின் திட்டத்தை அமல்படுத்தும் இன்போசிஸ்?

By Shankar
Google Oneindia Tamil News

இண்டியானாபோலிஸ்(யு.எஸ்): இண்டியானா மாநிலம் உட்பட அமெரிக்காவில் நான்கு புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை இன்போசிஸ் தொடங்க உள்ளது.

இந்த மையங்களில் 10 ஆயிரம் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது நடைமுறைக்கு வர உள்ளது.

Infosys recruiting ten thousand Americans

இந்த திட்டத்தின் படி, முதலாவது டெக்னாலஜி ஹப் இண்டியானா மாநிலத்தில் ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட உள்ளது.

அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இந்த மையங்களில் புதிய தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டமிட்டுள்ளதாம்.

அனுபவம் உள்ளவர்களுக்கும் புதியவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப் பட உள்ளன.

அந்தந்த வட்டாரத்தில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகங்கள், நகர கல்லூரிகளில்(Community Colleges) படிப்பவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்.

வட அமெரிக்காவில் சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் இன்போசிஸில் வேலை பார்க்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேர்கள் ஹெச் 1 பி விசாவில் உள்ளார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.

அதிபர் ட்ரம்ப், ஹெச் 1 பி விசாவை முறைகேடாக உபயோகப் படுத்தி, அமெரிக்க ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்று சமீபத்தில் குற்றம் சாட்டி இருந்தார்.

மேலும், ஹெச் 1 பி விசா முறைகேடுகள் பற்றி தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

Infosys recruiting ten thousand Americans

சாப்ட்வேர் டெவலப்பர்களை ஹெச் 1 பி விசாவுக்கான தகுதிகள் இல்லாதவர்கள் என்று நீக்கம் செய்து குடியுரிமைத் துறை அறிக்கை வெளியிட்டு இருந்தது.

அனுபவம் வாய்ந்தவர்களுக்கும், அந்த தகுதிக்கேற்ற ஆட்கள் அமெரிக்காவில் ஆட்கள் கிடைக்காத பட்சத்தில் தான் ஹெச் 1 பி விசாவில் அழைத்து வரலாம் என்ற வரையறையும் தீவிரமாக நடைமுறைப் படுத்தப் போவதாகவும் அறிக்கை வந்தது.

'அமெரிக்கப் பொருட்களை வாங்கு அமெரிக்கர்களுக்கு வேலை கொடு' என்ற புதிய உத்தரவையும் அமல்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே இன்போசிஸ் மீது ஹெச் 1 பி விசா முறைகேடுகள் பற்றி உள்ளூர் அமெரிக்கர்கள் தொடர்ந்த வழக்குகள் உள்ளன. சில வழக்குகளில் நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்புகள் வந்து மேல்முறையீட்டில் உள்ளன.

அதிபர் ட்ரம்பின் புதிய கொள்கைகளால் விசாக்களில் ஆட்களை அனுப்ப ஏகப்பட்ட நெருக்கடிகள் உள்ளதால், அமெரிக்கர்களுக்கு வேலை என்ற வழிக்கு மாறியுள்ளதாக தெரிகிறது.

அதே சமயத்தில் ட்ரம்பின் 'அமெரிக்கர்களுக்கு வேலை' என்ற அதிரடி உத்தரவுக்கு ஆதரவான முடிவா என்ற கேள்விக்கு நிர்வாகத்திடமிருந்து சரியான பதில் இல்லை.

புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அமெரிக்க ஊழியர்களுக்கு , Artificial Intelligence மற்றும் பிக் டேட்டா உள்ளிட்ட அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்கப்படும்

அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்தும் இந்த புதிய முயற்சிகள் எங்களுக்கு மகிழ்ச்சியானதாகும் என்று சிஇஓ விஷால் சிக்கா என்று கூறியுள்ளார்.

ட்ரம்பின் அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு தொடர் நெருக்கடி இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.

தேர்தல் பிரச்சார்த்தில், நெருக்கமான உறவுடன் இந்தியாவுடன் நட்பு நாடாக அமெரிக்கா இருக்கும் என்று இந்தியர்கள் மத்தியில் ட்ரம்ப் உரையாற்றி இருந்தார்.'

அமெரிக்காவில் வசிக்கும் பாஜக ஆதரவாளர்களும் ட்ரம்புக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவில் இந்தியர்களுக்கும் இந்திய நிறுவனங்களுக்கும் அதிக வாய்ப்புகளை வழங்கி வரும் ஐடி துறைக்க்கு நெருக்கடி தரும் நடவடிக்கைகளை ட்ரம்ப் எடுத்து வருகிறார்.

மோடியிடமிருந்தும் எந்த கோரிக்கையும் இல்லை. பாஜக ஆதரவு அமெரிக்க இந்தியர்களும் கைக்கட்டி வேடிக்கை பார்க்கத் தான் முடிகிறது

இன்போசிஸ் வழியில் ஏனைய இந்திய ஐடி நிறுவனங்களும், 'அமெரிக்கர்களுக்கு வேலை' என்ற அறிவிப்புகளை விரைவில் வெளியிடக் கூடும்.

- இர தினகர்

English summary
Infosys is planning to recruit ten thousands American employees in the new upcoming four technology hubs accross USA. New age technologies such as Artificial Intelligence and BIG Data will be the focused areas in these new hubs. CEO Vishal Sikka said, Infosys is excited with the new recruitment of American Employees and training them in the innovative technologies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X