அலி அஹமத் ஜலாலி தலைமையில் ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு? தாலிபன்கள் சம்மதமா?

Subscribe to Oneindia Tamil

காபூல் : அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளரும், ஆப்கானிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சருமான அலி அஹ்மத் ஜலாலி ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்படலாம் என்று காபூல் தூதரக வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. இருப்பினும் தாலிபன்கள் ஒப்புக்கொண்டார்களா என்பது தெரியவில்லை.

Recommended Video

    Game Over! Ashraf Ghani ராஜினாமா | Afghanistan கைப்பற்றிய தாலிபான் | Oneindia Tamil

    தாலிபன் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலுக்கு ஞாயிற்றுக்கிழமை (இன்று) நுழைந்தனர், அவர்கள் வருகையைல் வெளிநாட்டு தூதர்கள் மற்றும் பல உள்ளூர்வாசிகள் வெளியேற முயன்றாலும், அச்சப்பட வேண்டும் என்றும், முந்தைய இஸ்லாமிய ஆட்சியை நடைமுறைப்படுத்துவதாக உறுதி அளித்தனர்.

    செப்டம்பர் 11 அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து அமெரிக்க தலைமையிலான படைகளால் வீழ்த்தப்பட்ட தாலிபன்கள், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆப்கானிஸ்தானின் ஆட்சி பொறுப்பு வருகிறார்கள். காபூலை தாலிபன்கள் மின்னல் வேகத்தில் கைப்பற்றியதால், அமெரிக்க தூதரக அதிகாரிகள் உடனடியாக தூதரகத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாட்டை விட்டு வெளியேறினர்.

    சண்டை இல்லை

    சண்டை இல்லை

    இதனிடையே தாலிபன்கள் "எல்லா பக்கங்களிலிருந்தும்" தலைநகர் காபூலை அடைந்தார்கள் என்று ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார். இருப்பினும், சண்டை பற்றிய தகவல்கள் இல்லை.

    அதிகார பரிமாற்றம்

    அதிகார பரிமாற்றம்

    அமைதியான முறையில் சரணடைய வேண்டும் என்பதற்காக மேற்கத்திய ஆதரவு அரசாங்கத்துடன் (அஷ்ரப் கனி அரசு) இந்தக் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறினார். "அமைதியான மற்றும் திருப்திகரமான அதிகார பரிமாற்றம் ஒப்புக் கொள்ளப்படும் வரை காபூலின் அனைத்து நுழைவாயில்களிலும் தலிபான் போராளிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

    புதிய முயற்சி

    புதிய முயற்சி

    கடந்த கால தாலிபன்கள் ஆட்சியில் சிறுமிகளை பள்ளியை விட்டு வெளியேற்றுவதற்காகவும், இஸ்லாமிய சட்டத்தினை கடுமையாக நடைமுறைப்படுத்துதல் , கல்லெறிதல் , நடுரோட்டில் வெட்டிக்கொல்வது போன்ற உள்ளிட்ட தண்டனைகள் மூலம் அறியப்பட்ட தலிபான்கள் தற்போது நவீன முகத்தை முன்னிறுத்த முயற்சிப்பதாகத் தெரிகிறது.

    தாலிபன்கள் உறுதி

    தாலிபன்கள் உறுதி

    புதிய ஆட்சி பற்றி தாலிபன்களின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் கூறுகையில், இந்தக் குழு பெண்களின் உரிமைகளையும், ஊடகத் பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதர்களின் சுதந்திரங்களையும் பாதுகாக்கும். மக்களுக்கு, குறிப்பாக காபூல் நகரத்தில், அவர்களின் சொத்துக்கள், அவர்களின் உயிர்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம். வரும் நாட்களில் அதிகார பரிமாற்றம் நடக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

    அமெரிக்க உளவுதுறை

    அமெரிக்க உளவுதுறை

    உள்ளூர் ஆப்கானிஸ்தான் அரசாங்கப் படைகளை உருவாக்க அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் பல லட்சம் கோடிகளை செலவிட்ட போதிலும், தலிபான்களின் முன்னேற்றம் உலகையே திகைக்க வைத்துள்ளது. கடந்த வாரம் தான், அமெரிக்க உளவுத்துறை , தாலிபன்கள் காபூலை கைப்பற்ற மூன்று மாதங்களாவது ஆகும் என்று கூறியிருந்தது. ஆனால் அப்படி சொன்ன அடுத்த 3 நாளில் கைப்பற்றி அசர வைத்துள்ளனர் தாலிபன்கள்.

    அவசர பேச்சுவார்த்தை

    அவசர பேச்சுவார்த்தை

    அதிபர் அஷ்ரப் கானி ராஜினாமா செய்ய முடிவு செயதுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய நிலையில் அமெரிக்க அமைதி தூதுவர் சல்மே கலீல்சாத் மற்றும் நேட்டோ அட்லாண்டிக் கூட்டணியின் அதிகாரிகளுடன் அவசர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+