இந்தியாவுடன் கைகோர்க்க தயாராகும்.. புதிய வங்கதேசம்! குறுக்கே வரும் ஷேக் ஹசீனா.. உறவில் புது சிக்கல்
டாக்கா: இரு நாடுகளின் உறவை மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக, வங்கதேசத்தின் இடைக்கால அரசு அறிவித்திருக்கிறது. இருப்பினும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அறிக்கை இதற்கு தடங்கலாக இருப்பதாக வங்கதேசம் கூறியுள்ளது.
இந்தியாவின் பக்கத்து நாடான வங்கதேசத்தில், இடஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் மாணவர் போராட்டம் வெடித்தது. அந்நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிகளில் 30 சதவிகிதம் வரை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இது தவிர சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், பெண்களுக்கு 10 சதவிகிதம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் என மொத்த இடஒதுக்கீடு 56%ஐ கடந்திருக்கிறது. வங்க தேசத்தை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு துறையில் 3,000 காலிப்பணியிடங்கள் உருவாகின்றன. இதற்கு 4,00,000 பேர் விண்ணப்பிக்கின்றனர். எனவே, வேலை வாய்ப்புக்கு அதிக போட்டி ஏற்பட்டு வருகிறது.
இந்த போட்டிக்கு மத்தியில் 56% பணியிடங்கள் இடஒதுக்கீடு மூலமாக நிரப்பப்பட்டுவிடுகிறது. இது அந்நாட்டு மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய துறைகளில் திறமையானவர்கள் வருவதில்லை என்று புலம்பி வந்திருக்கின்றனர். இதற்காக தொடர் போராட்டங்கள் நடந்து வந்திருக்கிறது. போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டும்போது அந்நாட்டு அரசு இடஒதுக்கீட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். இப்படியாக கடந்த 2018ல் இந்த இடஒதுக்கீட்டை அந்நாட்டு அரசு ரத்து செய்திருந்தது.
இதற்கு பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம், இடஒதுக்கீடு ரத்துக்கு மற்ற மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கையில் அந்நாட்டின் உயர்நீதிமன்றம் இடஒதுக்கீடு ரத்து செல்லாது என்று அறிவித்தது. இது இந்த இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையேயான போராட்டத்தை தீவிரப்படுத்தியது. பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக வெடித்திருக்கிறது.
இதனை அடக்க காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையிலும், வன்முறையிலும் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 98 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். வன்முறையையடுத்த ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இப்படி இருக்கையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், வங்கதேசத்தின் இடைக்கால அரசுடன் நெருக்கத்தை ஏற்படுத்த சில முயற்சிகளை மேற்கொண்டது. அதாவது இந்தியாவின் வெளியுறவுத்துறை உயர்மட்ட அதிகாரி பிரனய் வர்மா, வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் வெளிவிவகார ஆலோசகர் எம்.டி. தௌஹித் ஹொசைனை சமீபத்தில் சந்தித்து பேசினார். இந்த உரையாடல் இந்தியாவுக்கும், வங்கதேசத்திற்குமான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த சந்திப்புக்கு பின்னர் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், இருநாடுகளின் உறவு பலப்பட தாமதமாகலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதாவது, "வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்ற விரும்புகிறது. ஆனால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவின் அறிக்கை இதற்கு சாதகமானதாக இல்லை" என்று தெரிவித்திருக்கிறது.
முன்னதாக ஷேக் ஹசீனா, "லட்சக்கணக்கான தியாகிகளின் ரத்தத்தை போராட்டக்காரர்கள் அவமதித்தனர். நாட்டு மக்களிடம் இருந்து எனக்கு நீதி வேண்டும். ஆகஸ்ட் 15ம் தேதி தேசிய துக்க தினத்தை உரிய கண்ணியத்துடனும், மரியாதையுடனும் கடைப்பிடிக்க வேண்டும். வங்கதேசத்தில் நடந்து வரும் கொலைகள் மற்றும் நாச வேலைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். தந்தை, தியாகிகள் அவமதிக்கப்பட்டனர். எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையை சேதப்படுத்தியதற்கு நீதி வேண்டும்.
பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் மாணவர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், ஊடகவியலாளர்கள் உயிரிழந்தனர். அன்புக்குரியவர்களை இழந்து வேதனையுடன் வாழ்பவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் நடந்த கொலைகள் மற்றும் நாசவேலைகளுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடரும் வன்முறை மற்றும் உயிரிழப்புகள் கவலை அளிக்கிறது" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications