"வாவ்.." வானத்தை பார்த்து வாயை பிளந்த மக்கள்.. பொள்ளாச்சியில் குவிந்த வெளிநாட்டவர்! பலூன் திருவிழா
கோவை: பொள்ளாச்சியில் எட்டாவது சர்வதேச பலூன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் பொள்ளாச்சிக்குக் குவிந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக எட்டாவது சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது. கோவை பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த இந்த திருவிழா நடைபெறுகிறது.
இந்த பலூன் திருவிழாவில் 8 நாடுகளில் இருந்து பத்து வகையான பல நூல்கள் பறக்க விடப்பட்டது. இதை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வதுத்துன் பார்த்து ரசித்தனர்.

பொள்ளாச்சி பலூன் திருவிழா
தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவை பொள்ளாச்சியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாகச் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இடையில் கொரோனா பரவல் காரணமாக சில ஆண்டுகள் இந்த பலூன் திருவிழா நடத்தப்படவில்லை.. இப்போது கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், மீண்டும் இந்தாண்டு பலூன் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளைச் சுற்றுலாத் துறை செய்தது.

உலக நாடுகள்
முதல்முறையாக சுற்றுலாத்துறை தனியாருடன் இணைந்து இந்த திருவிழாவை நடத்துகிறது. பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் இன்று காலை இந்த திருவிழா தொடங்கியது. இன்று முதல் இந்த திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பலூன் திருவிழாவில் 8 நாடுகளில் இருந்து பத்து வகையான பல நூல்கள் பறக்க விடப்பட்டுள்ளது.. அதேபோல தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ஒரு பலூன் பறக்க விடப்பட்டது..

இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே
பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் இதை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.. அமெரிக்கா, வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளின் பலூன்கள் இதில் பறக்கவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று தொடங்கும் இந்த பலூன் திருவிழா வரும் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வெளிநாடுகளில் மட்டுமே பொதுவாக இதுபோன்ற விழாக்கள் நடத்தப்படும் நிலையில், இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே இந்த பலூன் திருவிழா கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கட்டணம் எவ்வளவு
அடுத்த மூன்று நாட்களும் காலை மாலை என இரு வேலைகளிலும் இந்த பலூன்கள் வானில் பறக்க விடப்பட உள்ளது. இந்த பலூனில் பரப்பதற்காக ஒரு நபருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.. இந்த பலூன் திருவிழா முன்னிட்டு உணவுத் திருவிழா மற்றும் இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சி என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. இதை பார்க்கவும் பொதுமக்கள் அதிகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பறக்கவிடப்பட்டுள்ள பலூன்களில் மிக்கி மவுஸ், டைனோசர் பலூன்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சுற்றுலா பயணிகள்
உயர பறக்கும் இந்த பலூன்களை தூரத்தில் இருந்து பார்த்தாலே தெரியும் என்பதால் அப்பகுதி மக்கள் இதை ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கிறார்கள்.. மாவட்ட ஆட்சியர் சமீரன் அதிகாலையிலேயே பொள்ளாச்சிக்கு வந்து பலூன்கள் பறக்கும் நிகழ்வுகளைப் பார்வையிட்டார். காற்றின் வேகம், சமதளம், இயற்கை சூழல் எனப் பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு இந்த இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும் இதில் கலந்து கொள்ளும் வெளிநாட்டுப் பயணிகள் சுற்றியுள்ள சுற்றுலாத் தளங்களுக்குச் செல்வதால், அங்கும் பொருளாதாரம் மேம்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications