புத்தாண்டு வெடி? பாக். குண்டு வெடிப்பு- கந்தகார் விமான கடத்தல் பயங்கரவாதி மவுலானா மசூத் அசார் பலி?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் புத்தாண்டு நாளில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சர்வதேச பயங்கரவாதியும் 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கந்தகாருக்கு கடத்தப்பட்ட சம்பவத்தின் மூளையுமான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அசார் (மெளாலானா மசூத் அசார்) கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் அண்மை காலமாக இந்தியாவில் நாசவேலைகளை நடத்திய பல பயங்கரவாதிகள் அடுத்தடுத்து பல்வேறு சம்பவங்களில் பலியாகி வருகின்றனர். இந்தியாவால் தேடப்படுகிற ஹபீஸ் சயீத் மகன் உள்ளிட்ட பல பயங்கரவாதிகள் கடத்தப்பட்டும் மர்ம நபர்களால் சுடப்பட்டும் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் இந்த விவகாரங்களில் கனத்த மவுனம் சாதித்து வருகிறது.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதத்தை உருவாக்கி இளைஞர்களை பயங்கரவாதிகளாக்கிய ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் நிறுவனரும் 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஆப்கானிஸ்தானின் கந்தகாருக்கு கடத்தியவருமான சர்வதேச பயங்கரவாதி இன்று பாகிச்தானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றில் கொல்லப்பட்டுவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் பவல்பூர் மசூதி ஒன்றில் இருந்து மவுலானா மசூத் அசார் திரும்பி வரும் போது அவர் மீது சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டதாகவும் இந்த குண்டுகள் வெடித்து மவுலானா மசூத் அசார் பலியானதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் மவுலானா மசூத் அசார். காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற பயங்கரவாத கோட்பாட்டை மையமாக வைத்து ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை உருவாக்கியவர் அசார்.
ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவி பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வந்த மவுலானா மசூத் அசார் பாதுகாப்பு படையினரால் 1999-ல் கைது செய்யப்பட்டு காஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்டார். மசூத் அசாரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து 152 பயணிகளுடன் புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு ஆப்கானிஸ்தானின் கந்தகாருக்கு கொண்டு செல்லப்பட்டது. 5 நாட்களுக்கு பின்னர் மசூத் அசார் உட்பட 3 பயங்கரவாதிகள், ஒப்படைக்கப்பட்ட பின்னர் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விடுவிக்கப்பட்டது. அப்போது பிரதமராக பாஜகவின் வாஜ்பாய் இருந்தார். 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தாக்குதலின் மூளையாவும் மவுலானா மசூத் அசார் செயல்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications