Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெடித்தது பூகம்பம்.. ஈரான் அடுக்கிய 3 மெகா குற்றச்சாட்டு.. அமெரிக்காவின் அடுத்த ஆக்ஷன் என்ன?

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பு ஈரானின் '10 அம்ச அமைதி திட்டத்தின்' மூன்று முக்கிய உட்பிரிவுகளை மீறியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளார்.

அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே இந்த மீறல்கள் நடந்துள்ளதாகக் கூறிய அவர், 'பேச்சுவார்த்தைக்கான அடிப்படையை வெளிப்படையாக மீறப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு உலக அரசியலில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Iran war Trump USA Israel Iran 10-Point Proposal Violation Ghalibaf Accuses US Israel Lebanon Ceasefire Breach Iran Airspace Drone Violation Iran Uranium Enrichment Denial 10 Iran accuses US Israel violating 10-point proposal Ghalibaf statement on 10-point proposal violation three clauses violated Iran framework Lebanon ceasefire violation US Israel drone intrusion Iranian airspace US denial Iran uranium enrichment right workable basis for negotiation violated Iran parliament speaker Ghalibaf full statement deep historical distrust toward United States bilateral ceasefire unreasonable Iran Trump Truth Social Iran proposal Iran 10-point proposal agreed framework negotiations before start violation Iran accuses US of breaking commitments Ghalibaf warns talks unreasonable 10 10 10

10 புள்ளி திட்டம் என்ன?

ஈரான் தரப்பில் முன்வைக்கப்பட்ட 10 அம்ச அமைதி திட்டத்தை அடிப்படியாக கொண்டு தான் 2 வாரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டார். இந்த திட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று இரு தரப்பும் ஏற்றுக்கொண்டிருந்த நிலையில், பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை நடக்க இருந்த நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணிநேரத்தில் மூன்று முக்கிய உட்பிரிவுகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் கூறுகிறது.

ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்!
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்!

மீறப்பட்ட மூன்று உட்பிரிவுகள்

முதல் விஷயம்: லெபனான் போர் நிறுத்தம் தொடர்பானது. இந்த உட்பிரிவை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீறியுள்ளதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரான முகமது பாகர் காலிபாஃப் குற்றம்சாட்டினார். பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் 'உடனடி போர் நிறுத்தம்' என்று அறிவித்திருந்த நிலையில், இந்த உட்பிரிவு மீறப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இரண்டாவது விஷயம்: ஈரான் வான்வெளி மீறல் தடை. லார் நகரில் (ஃபார்ஸ் மாகாணம்) ஒரு ட்ரோன் ஈரான் வான்வெளிக்குள் நுழைந்து அழிக்கப்பட்ட சம்பவம் இந்த அமைதி திட்ட விஷயங்களை தெளிவாக மீறிப்பட்டு உள்ளது என்று கலீபாஃப் தெரிவித்தார்.

மூன்றாவது விஷயம்: ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் உரிமை. 10 புள்ளி திட்டத்தின் ஆறாவது உட்பிரிவில் இடம்பெற்றிருந்த நிலையிலை, இந்த உரிமையை அமெரிக்கா மறுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்!
தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்!

ஈரானின் எச்சரிக்கை

இந்த 3 விஷயம் மூலம் அமைதி பேச்சுவார்த்தைக்கான அடிப்படையை வெளிப்படையாக அமெரிக்காவும், ஈரானும் மீறப்பட்டுள்ளது என்று ஈரான் தரப்பில் வெளியாழ அறிக்கையில் முகமது பாகர் காலிபாஃப் வலியுறுத்தினார். அமெரிக்காவின் மீது ஈரான் கொண்டுள்ள 'நம்பிக்கையின்மை' மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தச் சூழலில் இருதரப்பு போர் நிறுத்தம் அல்லது பேச்சுவார்த்தை நியாயமற்றது என்று ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா விளக்கம்

ஈரான் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது, புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. மேலும் ஈரானின் 10 புள்ளி அமைதி திட்டம் குறித்து இஸ்ரேல் உடன் ஆலோசனை செய்யவில்லை என பாகிஸ்தான் வால் ஸ்ட்ரீட் ஜர்னல்-க்கு தெரிவித்துள்ளது.

ஒப்பந்தம் இறுதி நிலைக்கு வந்த பின்னரே டிரம்ப் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு விரைவான தகவல் பரிமாற்றம் போன் கால் வாயிலாக நடந்தது என கூறப்படுகிறது.

மேலும், ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படும் என்ற தகவலும் இஸ்ரேல் தரப்பில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், நெத்தன்யாகு பின்னர் இந்த ஒப்பந்தத்தில் லெபனான் இடம்பெறவில்லை என்று தெரிவித்ததால், மூன்று தரப்புகளுக்கிடையே கருத்து முரண்பாடு உருவாகியுள்ளது.

Gold Price: தங்கத்தை விற்றுத்தள்ளும் துருக்கி.. எங்களுக்கு வேறு வழி தெரியல!
Gold Price: தங்கத்தை விற்றுத்தள்ளும் துருக்கி.. எங்களுக்கு வேறு வழி தெரியல!

உலக அரசியல் பதற்றம்

இந்த விதிமீறல் மற்றும் முரண்பாடுகள் ஈரான்-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை சாத்தியத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 15 நாள் போர் நிறுத்தம் இன்னும் சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில், இந்த விதி மீறல் குற்றச்சாட்டு உலக அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. எண்ணெய் விலை, உலக வர்த்தகம் மற்றும் பொருளாதார நிலை ஆகியவை இந்தப் பதற்றத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஈரானின் 10 அம்ச அமைதி திட்டம்

ஈரான் வெளியிட்டுள்ள 10 அம்ச திட்டத்தின் முழு விபரம்
1. ஈரான் மீது மீண்டும் தாக்கப்படாது என்பதற்கான உத்தரவாதம் அமெரிக்கா மற்றம் அதன் நட்பு நாடுகள் வழங்க வேண்டும்.
2. தாக்குதல் நிறுத்தம் மட்டுமல்ல, போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்தல் வேண்டும்.
3. லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
4. ஈரான் மீதான அனைத்து அமெரிக்கத் தடைகளையும் நீக்க வேண்டும்.
5. ஈரானிய நட்பு நாடுகளுக்கு எதிரான அனைத்து பிராந்திய தாக்குதல்கள் போர்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
6. இதற்குப் பதிலாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கும்.
7. இதேபோல் ஹார்மூஸ் வழியாக செல்லும் ஒவ்வொரு கப்பலுக்கும் 2 மில்லியன் டாலர் ஈரான் கட்டணத்தை விதிக்கும்.
8. ஈரான் இந்தக் கட்டணங்களை ஓமான் நாட்டுடன் பகிர்ந்து கொள்ளும்.
9. ஹார்முஸ் வழியாகப் உலக நாடுகளின் கப்பல் பாதுகாப்பாகச் செல்வதற்கான விதிகளை ஈரான் வழங்கும்.
10. ஈரான் ஹார்முஸ் கட்டணங்களை இழப்பீடுகளுக்குப் பதிலாகப் புனரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+