ஒருகோடி பேரை காப்பாற்ற.. தலைநகரை மாற்றும் ஈரான்.. டெஹ்ரானுக்கு பதில் மக்ரான்.. பின்னணி இதுதான்
டெஹ்ரான்: ஈரான் தனது தலைநகரை டெஹ்ரானில் இருந்து மக்ரானுக்கு மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக 2 கமிட்டி அமைக்கப்பட்டு சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட உள்ள நிலையில் இந்த தலைநகர் மாற்றத்தின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முக்கியமான நாடாக ஈரான் உள்ளது. எண்ணெய் வளமிக்க நாடான ஈரானின் மக்கள்தொகை என்பது 8.59 கோடியாகும். இதில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் மட்டும் ஒரு கோடி மக்கள் வசிப்பதாக கூறப்படுகிறது.

தலைநகர் என்பதால் ஏராளமான மக்கள் டெஹ்ரானில் உள்ளனர். இதனால் தற்போது டெஹ்ரானில் மின்தட்டுப்பாடு, தண்ணீர் பிரச்சனை என்பது ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதேபோல் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மக்கள்தொகையால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் தினமும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இது எல்லாவற்றுக்கும் மேலாக டெஹ்ரானில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள இடமாக வார்னிங் செய்யப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் உயிரை காக்கவும், மக்களுக்கான பிரச்சனைகளை போக்கவும் ஈரான் தனது தலைநகரை மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. தலைநகரை மாற்றம் செய்வது தொடர்பாக ஈரான் தீவிரமாக பரிசீலனை நடத்தி வருகிறது. அதன்படி தற்போது ஈரான் தலைநகராக டெஹ்ரான் உள்ளது. டெஹ்ரானுக்கு வரும் புதிய தலைநகராக மக்ரான் நகரை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஈரான் செய்தி தொடர்பாளர் பாத்மி மோகஜிரணி கூறுகையில், ‛‛ஈரான் தனது தலைநகரை மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. ஈரானின் புதிய தலைநகராக தெற்கு கடற்கரை பிராந்தியமான மக்ரான் பகுதியில் அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. தற்போதைய தலைநகர் டெஹ்ரானில் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் மின்தட்டுப்பாடு, குடிநீர் பிரச்சனை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் தலைநகரை மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 2 கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி சார்பில் தலைநகரை மாற்றம் செய்வதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்கின்றன. இந்த தலைநகர் மாற்றம் என்பது உடனடியாக நடக்காமல் இருந்தாலும் கூட அது முக்கிய தேவையாக இருக்கிறது '' என்றார்.
ஈரான் தனது புதிய தலைநகரை மக்ரான் பகுதியில் உருவாக்க திட்டமிட்டுள்ள நிலையில் அந்த இடம் ஓமன் வளைகுடா கடற்கரையையொட்டி வரும். அதோடு ஈரானின் தெற்கு கடற்கரை பகுதியில் பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்த இடம் அமைந்துள்ளது. இங்கு தலைநகரை உருவாக்குவதன் மூலம் கடல்சார் வணிகத்தை மேம்படுத்த முடியும். இது ஈரானின் வர்த்தகத்தை இன்னும் அதிகப்படுத்தும். அதுமட்டுமின்றி அதிகரிக்கும் மக்கள்தொகை உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து டெஹ்ரானை மீட்க முடியும் என்று இங்கே கவனிக்கத்தக்கது.
இருப்பினும் ஈரான் தலைநகர் டெஹ்ரானை மாற்றம் செய்ய ஒருதரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தலைநகரை மாற்றம் செய்ய அதிக நிதி செலவு ஏற்படும். அதேபோல் அலுவலகங்கள் மாற்றம் செய்யப்பட வேண்டும். மக்களும் உடனடியாக இடம்பெயருவது சிரமமான காரியமாக இருக்கும் என்று கவலையுடன் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.
ஈரானை பொறுத்தவரை தலைநகர் டெஹ்ரானை மாற்றம் செய்ய வேண்டும் என்ற முடிவு நீண்டகாலமாக விவாதத்தில் உள்ளது. 1979ம் ஆண்டில் இருந்தே இந்த கோரிக்கை என்பது நிலுவையில் உள்ளது. அதாவது முன்னாள் அதிபர்கள் முகமது அஹமத் இனிஜாத் மற்றும் ஹசன் ருஹானி உள்ளிட்டவர்களின் பதவிக்காலத்திலும் இந்த தலைநகர் மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆனாலும் பொருளாதார பிரச்சனையால் புதிய தலைநகரை உருவாக்கும் முயற்சி கைக்கூடவில்லை. இப்போது மீண்டும் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் காலத்தில் தலைநகரை மாற்றம் செய்ய தீவிரமான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications