டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான்
தெஹ்ரான்: ஈரானுடன் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற போர் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், இதனால் அடுத்த 5 நாட்களுக்கு அந்த நாட்டின் மீது போர் தொடுக்கப்படாது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களில் ஈரான் இதற்கு உடனடியாக பதில் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்று ஈரான் ஊடகம் தெரிவித்து இருக்கிறது.
ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த 28 ஆம் தேதி தொடங்கிய போர் இடைவிடாமல் நீடித்து வந்தது. ஈரானின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதால் கோபம் அடைந்த ஈரான், அமெரிக்காவை பழிக்கு பழி வாங்காமல் விட மட்டோம் என்று கூறி பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தியது.

போர் நிறுத்தம் அறிவித்த டிரம்ப்
இதனால், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை நோக்கி குண்டுமழையை ஈரான் பெய்தது. கத்தார், பஹ்ரைன், துபாயில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. கத்தாரில் உள்ள உலகின் மிகபெரிய எல்.என்.ஜி ஆலை மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் வான்பாதுகாப்பின் கண்ணில் மண்ணை தூவி ஈரான் குண்டு மழை பொழிந்தது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் மூன்று வாரத்தை கடந்து சென்றது. ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடுவதாக ஈரான் அறிவித்ததால், சர்வதேச அளவில் போரின் தாக்கம் உடனடியாக எதிரொலித்தது. கச்சா எண்ணெய் கடுமையாக உயர்ந்ததோடு, எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்திற்குள் திறக்காவிட்டால் நடப்பதே வேறு எச்சரித்த டிரம்ப், இன்று 5 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
உடனே மறுத்த ஈரான்
ஈரானுடன் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற போர் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும் இதனால், அடுத்த 5 நாட்களுக்கு அந்த நாட்டின் மீது போர் தொடுக்கப்படாது என்றும் டிரம்ப் அறிவித்தார். டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களில் ஈரான் இதனை மறுக்கும் விதமாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஈரான் கூறுகையில், "அமெரிக்கா ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளை தாக்கினால், முழு பிராந்தியத்தின் எரிசக்தி அமைப்புகளையும் இலக்காகக் கொள்ளும் என இஸ்லாமிய குடியரசு எச்சரித்ததையடுத்து, டிரம்ப் பின் வாங்கி, தாக்குதலை ஒத்திவைக்க உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார்" என்று தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தை நடத்தவில்லை
அமெரிக்காவுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்றும் ஈரான் ஊடகம் தெரிவித்து இருக்கிறது. அதே நேரத்தில் கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது என்று டிரம்ப் கூறியதை ஆப்கானிஸ்தானில் உள்ள ஈரான் தூதரகம் மறுக்கவில்லை.
ஈரானின் அரசு ஊடகமான பிரஸ் டிவியில் இது தொடர்பாக வெளியிட்ட செய்தியில், ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி கூறியதாக தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஈரானின் ராணுவ அச்சுறுத்தல் மற்றும் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் நிதி சுமை அதிகரிப்பு ஆகியவை காரணமாக டிரம்ப் இதை வாபஸ் பெற்றுள்ளார். பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. உளவியல் போர் மூலம் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும், எரிசக்தி சந்தையை நிலைநிறுத்தவும் முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி












Click it and Unblock the Notifications