ரஷ்யாவை ஓரம் கட்டி.. சீனாவிடம் போர் விமானத்தை அவசரமாக வாங்கும் ஈரான்! காரணம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்திய தாக்குதல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது ஈரானின் வான் பாதுகாப்பை நவீனப்படுத்த வேண்டிய டைம் என்பதை அந்நாட்டுக்கு உணர்த்தியுள்ளது. இதனையடுத்து புதிய விமானங்களை சீனாவிடமிருந்து ஈரான் வாங்க முன்வந்திருக்கிறது. ஏற்கெனவே ஆயுத பாட்னராக ரஷ்யா இருக்கும்போது சீனாவிடம் ஏன் விமானம் வாங்க வேண்டும் என்பதுதான் தற்போதைய கேள்வி. அப்படியெனில் சீனா ராணுவ தளவாடங்கள் விற்பனையிலும் மாஸ் காட்ட தொடங்கியுள்ளதா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

கடந்த 13ம் தேதி இஸ்ரேலும் அதை தொடர்ந்து அமெரிக்காவும், ஈரானின் அணு ஆய்வு மையங்களை குறி வைத்து தாக்கியிருக்கின்றன. இதனால் ஈரான் தனது விமானப்படையை அப்டேட் செய்ய வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

Iran China Russia

சீனாவிடம் இருந்து J-10C ரக 36 போர் விமானங்களை வாங்க ஈரான் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த 2023ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ரஷ்யாவிடம் இருந்து 50 Su-35 போர் விமானங்களை வாங்க ஈரான் திட்டமிட்டிருந்த நிலையில், இதுவரை நான்கு விமானங்கள் மட்டுமே ரஷ்யா கொடுத்திருக்கிறது. இதனால், சீனாவிடம் போர் விமானங்களை வாங்க ஈரான் முடிவு செய்துள்ளது என மாஸ்கோ டைம்ஸ் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக, 2015-லேயே J-10 ரக போர் விமானங்களை 150 யூனிட்கள் வாங்க ஈரான் முயற்சித்தது. ஆனால், பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த ஒப்பந்தம் தோல்வியடைந்தது. இந்த ஒப்பந்தத்தில் சீனா வெளிநாட்டு கரன்சியை கேட்டிருந்தது. மறுபுறம் சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்யவே ஈரான் விரும்பியது. மட்டுமல்லாது இந்த நேரத்தில்தான் ஐநா ஆயுத தடை உத்தரவு வெளியாகியிருந்தது. இதுவும் இந்த ஒப்பந்தம் தோல்வியடைய முக்கிய காரணம்.

சீனாவின் J-10C போர் விமானம், 4.5-ஆம் தலைமுறை போர் விமானமாகும். இது நீண்ட தூர PL-15 ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டது. பாகிஸ்தான் விமானப்படையில் இந்த விமானம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. ரஷ்யாவின் Su-35 போர் விமானத்திற்கு இது ஒரு சிறந்த மாற்றாக கருதப்படுகிறது. மேலும், Su-35 போர் விமானத்தை விட இது 40-60 மில்லியன் டாலர்கள் வரை விலை குறைவானது. எனவேதான் ஈரான் இந்த விமானத்தின் பக்கம் தனது கவனத்தை திரும்பியுள்ளது.

ஆக சீன விமானங்களை வாங்க காரணம் இதுதான். அதேபோல ரஷ்ய விமானங்களை வாங்காமல் இருந்ததற்கு காரணமும் இருக்கிறது. கடந்த 2022-ல் Su-35 போர் விமானங்களுக்காக மாஸ்கோவுடன் ஈரான் செய்துகொண்ட ஒப்பந்தம், ஈரான் விமானப்படையை மீண்டும் பலப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த ஒப்பந்தம் மீண்டும் மீண்டும் பின்னடைவை சந்தித்து வருகிறது. கடந்த 2023-ன் தொடக்கத்தில் போதுமான அளவுக்கு விமானங்கள் வழங்கப்படும் என்று ஈரான் நம்பியிருந்தது. இதுவரை சில விமானங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஈரானுக்கு அனுப்பவிருந்த Su-35 விமானங்கள் அல்ஜீரியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக மார்ச் 2025-ல் தகவல் வெளியானது. எனவேதான் தனது ஆயுத பாட்னரை ஈரான் மாற்றியிருக்கிறது.

2025-ன் ஆரம்பத்தில் ஈரானிடம் சுமார் 150 போர் விமானங்கள் இருந்தன. ஆனால், அந்த விமானங்கள் 1979-க்கு முன்பு அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்டவை.

F-4 Phantom II (64 யூனிட்கள்),
F-5E/F Tiger II (35)
F-14A Tomcat (41)

இதுதான் அந்த பழைய விமானங்களாகும். இதில் பல விமானங்கள் இயக்க முடியாத நிலையில் உள்ளன. அல்லது தொடர்ந்து பழுது பார்க்க வேண்டிய நிலையில் உள்ளன. மேலும், 1980-களின் பிற்பகுதியிலும் 1990-களின் முற்பகுதியிலும் வாங்கப்பட்ட 18 மிக்-29A/UB ரக விமானங்களும் உள்ளன. அவை தற்போது பழமையானதாக உள்ளன. இதுதான் ஈரான் வான் பாதுகாப்பு அமசத்தின் நிலைமை.

கடந்த பத்து ஆண்டுகளில், ஈரான் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளின் முதுகெலும்பாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மேற்பரப்பிலிருந்து வான் ஏவுகணை அமைப்புகளை பெரிதும் நம்பியிருந்தது. ஆனால், இஸ்ரேல்-அமெரிக்க கூட்டு தாக்குதல்களின்போது இந்த அமைப்புகள் இஸ்ரேல் அடித்து நொறுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+