இஸ்ரேல் எதிர்பார்க்காத அடி.. மிகப்பெரிய எண்ணெய் ஆலையை தாக்கிய ஈரான்! மின்சாரம் துண்டிப்பு
தெஹ்ரான்: இஸ்ரேலின் ஹைஃபா நகரில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. எண்ணெய் ஆலையில் புகை மண்டலங்கள் சூழ்ந்துள்ள நிலையில், பெரியளவு சேதம் இல்லை என இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆலை அந்நாட்டின் 60% டீசல், 50% பெட்ரோல் தேவையை பூர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது கடந்த மாதம் 28 ஆம் தேதி போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம், அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை படுகொலை செய்தது. அதைத்தொடர்ந்து வளைகுடா பிராந்தியம் முழுவதும் மூண்டுள்ள போரில் ஈரானில் 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் அரசு மற்றும் ராணுவத்தின் முக்கிய தலைவர்களும் உயிரிழந்து உள்ளனர்.

இதில் மற்றுமொரு இழப்பாக அந்த நாட்டின் உச்சபட்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் பலியானார். நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரான இவர், டிரம்ப் நிர்வாகத்துடன் நடத்தப்பட்ட அணுசக்தி பேச்சுவார்த்தையில், கொல்லப்பட்ட அயதுல்லா அலி காமேனிக்கு ஆலோசகராக செயல்பட்டு வந்தார். அந்தவகையில் ஈரானின் மிகவும் அதிகாரம் கொண்ட நபராகவும் இருந்தார்.
இதேபோல ஈரானின் புரட்சிகர ராணுவத்தின் தலைவர் ஜெனரல் கோலம் ரெசா சுலைமானியும் நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர்கள் இருவரும் இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் பலியாகினர். எனவே இருவரின் கொலைக்கு பழிவாங்கும் வகையில் ஈரான் நேற்று தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. குறிப்பாக இஸ்ரேல் மீது கொத்துக் குண்டுகளை வீசி அதிர வைத்தது. இன்று ஈரான் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) நிலையங்களில் ஒன்றான ராஸ் லஃபானை ஈரான் தாக்கியுள்ளது. கத்தாரின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த தாக்குதலை உறுதி செய்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரானிலிருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளால் ராஸ் லஃபான் பெரும் சேதம் அடைந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் ஹைஃபா நகரில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆலையில் புகை மண்டலங்கள் சூழ்ந்துள்ள நிலையில், பெரியளவு சேதம் இல்லை என இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆலை அந்நாட்டின் 60% டீசல், 50% பெட்ரோல் தேவையை பூர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக, நாட்டின் எரிபொருள் தேவையின் கணிசமான பகுதியை வழங்கும் அந்த நிலையத்தில் மின்வெட்டும் தீ விபத்துகளும் ஏற்பட்டன.
முதல் முறையாக 'Nasrallah' வகை ஏவுகணை அமைப்பைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. இதில் இஸ்ரேலின் ஹைஃபா மற்றும் அஷ்டோட் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ஈரான் நடத்திய தாக்குதால் கடும் கோபம் அடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் மீண்டும் கத்தாரை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தினால் மட்டுமே சவுத் பார்ஸ் எண்ணெய் வயலில் இஸ்ரேல் மீண்டும் தாக்கும். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், இஸ்ரேலின் உதவி இல்லாமலேயே அமெரிக்கா, பெரிய அளவில் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்கும்" என்று எச்சரித்தார்.
-
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
மத்திய கிழக்கு முழுவதும் ஒலித்த சைரன் சத்தம்.. பங்கரில் பதுங்கிய மக்கள்! மோசமடையும் நிலைமை! -
ஈரான் உச்சகட்ட வார்னிங்.. ஹார்முஸ் முழுக்க கண்ணிவெடி வச்சிருக்கோம்.. அந்த பக்கம் போகாதீங்க! -
"ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கிறோம்.." ஈரான் அறிவிப்பு.. ஓவர்நைட்டில் முடிவுக்கு வந்த வளைகுடா போர் -
அடிசக்க.. பிட்காயின் விலை 72000 டாலர்.. ஈரான் போர் நிறுத்தம் எப்படி வேலை செய்யுது பாருங்க! -
"நோ என்ட்ரி".. ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான்.. இஸ்ரேலால் மீண்டும் பதற்றம்.. என்ன நடந்தது? -
டிரம்ப் அடங்கவே மாட்டார் போல.. "இதுவரை கண்டிராத தாக்குதல் இருக்கு!" ஈரானுக்கு புதிய எச்சரிக்கை -
திருப்பூர் டூ நொய்டா.. சொல்லிவச்ச மாதிரி நடக்குதே..! -
டிரம்ப்பை மதிக்காத இஸ்ரேல்? போரை நிறுத்துவதாக அமெரிக்கா சொல்லிய பிறகும் ஏவுகணை தாக்குதல்! பரபரப்பு -
நாளை மறுநாள் முக்கியமான மீட்டிங்! களத்தில் அமெரிக்க அதிகாரிகள்! வளைகுடா எதிர்காலமே இதில்தான் இருக்கு -
ஈரான் அமெரிக்கா போர் நிறுத்தம்.. சிலிண்டர் பிரச்சனை எப்போதுதான் தீரும்? இப்படி ஒரு சிக்கல் இருக்கா? -
ஈரானில் விழுந்த அமெரிக்க விமானி! இதய துடிப்பை வைத்து பிடித்த US.. CIAன் 'கோஸ்ட் மெர்மெர்' வேட்டை












Click it and Unblock the Notifications