அமெரிக்காவுக்கு தலைவலியை கொடுக்கும் ஈரான்.. கையில் எடுத்த புது ஆயுதம்! தவறவிட்ட டிரம்ப்!
தெஹ்ரான்: ஈரான் அனுப்பிய பெரும்பாலான ஏவுகணைகளை அமெரிக்காவும், இஸ்ரேலும் பாதியில் தடுத்து அழித்துவிட்டது. ஆனால், அதையும் மீறி சில ஏவுகணைகள் இஸ்ரேலின் ராணுவ தளத்தை தாக்கியுள்ளன. இதற்காக புதிய வகை ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தியிருக்கிறது.
ஈரான், தங்கள் தலைவரை இழந்த பின்னரும் கூட தாக்குதலை நிறுத்தவில்லை. இதே வேகத்தில் போனால் அமெரிக்கா பெரிய பொருளாதார சிக்கலை எதிர்கொள்ளும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் ஜெயித்தது எங்கே?
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான மோதல் தற்போது 2வது வாரத்தை எட்டியுள்ளது. போர் தீவிரமடைந்து வரும் சூழலில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) தனது ' Operation True Promise 4' நடவடிக்கையின் கீழ், 27வது அலைத் தாக்குதல்களை அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் வந்த ஏவுகணைகள்தான் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் பயத்தை கிளப்பியிருக்கிறது. இந்த ஏவுகணைகளை பெரிய அளவில் தடுக்க முடியவில்லை என்பதுதான் பயத்துக்கு காரணம்.
ஈரான் ராணுவம் சொன்ன விஷயம்
தடுக்கப்படாத ஏவுகணைகள் தாக்கியதில், இஸ்ரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீப்பிடித்துள்ளது. மொத்தம் 12 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. புதிதாக உருவாக்கப்பட்ட திட எரிபொருள் ஏவுகணைகளை ஈரான் இந்த முறை பயன்படுத்தியிருக்கிறது.
இது குறித்து ஐஆர்ஜிசி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "இந்த தாக்குதலில், சியோனிச இராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டிரக்கின்றன. எங்களுடைய புதிய 'கெய்பர் ஷெகான்' ஏவுகணைகளால் அவை தாக்கப்பட்டன. இந்த ஏவுகணைகள் குறிப்பிட்ட இலக்கைச் சரியாக அடையும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வெறும் 15 நிமிடங்களில்
திட எரிபொருள் ஏவுகணைகள், திரவ எரிபொருள் ஏவுகணைகளில் இருந்து வேறுபடுகின்றன. திரவ எரிபொருள் ஏவுகணைகளுக்கு ஏவுவதற்கு சற்று முன்னர் எரிபொருள் நிரப்பப்பட வேண்டும். ஆனால் திட எரிபொருள் ஏவுகணைகளில் ஏற்கனவே எரிபொருள் சேமிக்கப்பட்டு இருக்கும். இதனால், குறைந்தபட்சத் தயாரிப்பு நேரத்துடன் அவற்றை விரைவாக ஏவ முடியும். அதாவது வெறும் 15 நிமிடத்திற்குள் இந்த ஏவுகணைகளை தயார் செய்தவிட முடியும்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் விளக்கம்
இந்த ஏவுகணையில் அப்படி என்னதான் எரிபொருளை பயன்படுத்துகிறார்கள்? என்று பலருக்கும் கேள்வி இருந்தது. இது குறித்து, ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகம் விளக்கமளித்துள்ளது. அதாவது, இந்த ஏவுகணைகளின் எரிபொருளானது பொதுவாக அலுமினியம் போன்ற உலோகப் பொடிகள், அம்மோனியம் பெர்ச்சொரேட் போன்ற ஆக்சிஜனேற்றம் செய்யும் பொருளுடன் கலக்கப்பட்டு, ரப்பர் போன்ற ஒரு பொருளால் பிணைக்கப்பட்டு உலோக உறையில் அடைக்கப்பட்டிருக்கும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாய்பில்லை ராஜா
இது, வளிமண்டலத்திற்குள் 19,500 கி.மீ/மணி வரையிலும், வளிமண்டலத்திற்கு வெளியே சுமார் 9,800 கி.மீ/மணி வரையிலும் வேகத்தை எட்டக்கூடியது. எனவே இந்த ஏவுகணைகளை இடைமறிப்பதும், தடுப்பதும் கடினம். மட்டுமல்லாது எரிபொருளை நிரப்பி, பதுங்கு குழிக்குள் பதுக்கி வைக்கலாம் என்பதால், செயற்கைக்கோள் மூலம் கூட எதிரிகளால் இதை கண்டுபிடிக்க முடியாது. இதை ஈஸியாக ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்ல முடியும்.
இப்படி தயாரிக்கப்பட்ட ஏவுகணைக்கு 'கெய்பர் ஷெகான்' என்று பெயர். அதாவது கோட்டை தகர்ப்பான் என்று அர்த்தம். இந்த ஏவுகணை சுமார் 1,450 கிலோமீட்டர் தூரம் வரை பாயும் திறன் கொண்டது. இது மேற்கு ஈரானிலிருந்து இஸ்ரேலை நேரடியாக தாக்கும்.
நேரடியாக தாக்க முடியும்
துல்லியத்தை மேம்படுத்தும் வகையில் செயற்கைக்கோள் வழிகாட்டல் மற்றும் திசை திருப்பக்கூடிய போர்க்கருவியுடன் இது பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை சுமார் 4 மீட்டர் நீளமும், தோராயமாக 1,500 கிலோகிராம் எடையும் கொண்டது. இதனால் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளாலும் இதை இடைமறிப்பது சாத்தியமில்லை. எனவேதான் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானை பார்த்து பயப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
'ஓமன்'ஐயும் தகர்த்துவிடுவேன்.. நட்பு நாடு என்றும் பாராமல் மிரட்டிய டிரம்ப்! மத்திய கிழக்கில் டென்ஷன் -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்!












Click it and Unblock the Notifications