30 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கா- ஈரான் அதிபர்கள் இடையே தொலைபேசி உரையாடல்
வாஷிங்டன்: 30 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக அமெரிக்கா- ஈரான் அதிபர்களிடையே தொலைபேசி மூலமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஈரானில் 1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து உலக நாடுகள் அந்நாட்டுக்குப் பொருளாதாரத் தடைகளை விதித்தன. ஈரானின் அணுசக்தி உற்பத்தி குறித்தும் எதிர்ப்பு கிளம்பியது.

தற்போது ஈரான் அதிபராக ஹசன் ருஹானி பதவியேற்றதைத் தொடர்ந்து நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. அண்மையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா பொதுசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு ருஹானி தனது முதல் உரையை ஆற்றினார்.
அப்போதே ருஹானி அமெரிக்க அதிபரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் இது சிக்கலான விஷயம் என்பதால் தவிர்க்கப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்பின்னர் பிரான்ஸ் அதிபர் ஹாலன்டேயையும் அவர் சந்தித்துப் பேசினார். மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியும், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் சரிபும் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரில் சந்தித்து உரையாடினர்.
இந்நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும், ஈரானின் அதிபர் ஹசன் ருஹானியும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது ஈரானின் அணுசக்தி விவகாரம் தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications