Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரானில் 12,000 பேர் படுகொலை? நாளுக்கு நாள் உச்சமடையும் போராட்டம்.. உலகையே அதிர வைக்கும் தகவல்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: ஈரான் நாட்டில் போராட்டம் மிகப் பெரியளவில் வெடித்துள்ள சூழலில், நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. இதற்கிடையே அங்கு ஏற்பட்டுள்ள இந்த வன்முறை போராட்டங்களில் சுமார் 12,000 முதல் 20,000 பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் உயிரிழப்புகள் உச்சம் தொடும் நிலையில், போராட்டங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஈரான் நாட்டில் அங்குள்ள கமேனி அரசுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் நடந்து வருகிறது. சுமார் இரண்டு வாரங்களாகவே போராட்டம் தொடரும் நிலையில், நாளுக்கு நாள் இது பெரியளவில் வெடித்து வருகிறது. நிலைமை மோசமாக போகும் சூழலில், போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு மோசமான வன்முறையைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

Iran Protests reaches peak Death Toll Feared Over 12 000 as Videos Show Bodies Piled at Morgues

12 ஆயிரம் பேர் உயிரிழப்பு?

இதற்கிடையே அங்கு நிலைமை எந்தளவுக்கு மோசம் என்பதைக் காட்டும் வகையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச வல்லுநர்கள் கணித்ததை விட அங்கு நிலைமை மோசமாகக் கொடூரமானதாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.. போராட்டக்காரர்கள் மீது ஈரான் அரசு மோசமான தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், இதில் சுமார் 12,000 முதல் 20,000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தளவுக்கு உயிரிழப்புகள் அங்கு நடந்திருந்தால்.. அது மிகக் கொடூரச் சம்பவமாகவே இருக்கும்.

இது தொடர்பாகப் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் யெவெட் கூப்பர் கூறுகையில், "பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம். 2000 அல்லது அதற்கு மேல் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எனக்கு உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

மொத்தமாக முடங்கியது

கடந்த ஐந்து நாட்களாக ஈரான் அரசு அங்கு இணைய மற்றும் தொலைப்பேசி சேவைகளைத் துண்டித்ததால், அங்கு எந்தளவுக்கு மோசமான சூழல் என்பதை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டிருந்தது.. இப்போதும் அங்கு இணைய முழுமையாகச் சேவை முடக்கப்பட்டிருந்தாலும், செல்போன் அழைப்புகள் வேலை செய்ய ஆரம்பித்தன. இதன் காரணமாகவே உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் அங்கிருந்து வெளியாக ஆரம்பித்துள்ளது.

அச்சுறுத்தல்

அங்குள்ள ஒரு நபர் சர்வதேச ஊடகத்திடம் கூறுகையில், நாடு முழுவதும் இருந்து உயிரிழப்பு குறித்த டேட்டாவை ஒருங்கிணைத்துள்ளதாகவும் பலி எண்ணிக்கை குறைந்தது 12,000 முதல் அதிகபட்சமாக 20,000ஆகவும் இருக்கலாம் என நம்புவதாகக் கூறியது. மேலும், மருத்துவமனைகளுக்குச் செல்லும் பாதுகாப்புப் படையினர், அங்குப் போராட்டங்களில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளை ஒப்படைக்குமாறு ஊழியர்களை அச்சுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஈரானில் செயல்படும் எதிர்க்கட்சி ஆதரவு ஈரான் இன்டர்நேஷனல் தொலைக்காட்சியும், அங்குச் சுமார் 12,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறியது. இந்த தகவலைச் சர்வதேச ஊடகத்தினர் உறுதி செய்ய முடியவில்லை என்றாலும் கூட அங்கிருந்து வரும் பல்வேறு தகவல்கள் 12,000 பேர் முதல் 20,000 பேர் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்றே கூறுகிறது.

ஈரான் அரசு சொல்வது என்ன

இந்தப் போராட்டங்களில் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலையும் பகிர்வதில்லை. இருப்பினும், பெயர் வெளியிட விரும்பாத ஈரான் அதிகாரி ஒருவர், போராட்டங்களில் பல ஆயிரம் பேர் உயிரிழந்து இருக்கலாம் என்றும் இந்த வன்முறைக்கு வெளிநாட்டுத் தூண்டுதலால் செயல்படும் பயங்கரவாதிகளே காரணம் என்றும் கூறியிருக்கிறார். மேலும், கலவரத்தைத் தூண்டும்படி பணம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+