ஈரானை சீண்டிய இஸ்ரேல்.. வலியை புரிய வைக்க வேண்டிய நேரம் வந்துருச்சு! அயதுல்லா அலி கமேனி வார்னிங்..!
தெஹ்ரான்: கடந்த ஒன்றாம் தேதி இஸ்ரேல் பகுதிகளில் ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த சில நாட்களுக்கு முன் ஈரான் தலைநகரில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் போர் தளவாடங்கள் சேதமான நிலையில் நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் எதிரிகளுக்கு வலியை புரிய வைக்க வேண்டும் என கூறியுள்ளார் ஈரானின் உயர் தலைவரான அயத்துல்லா அலி கமேனி.
ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ஈரான் மீது, ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கு விதமாக நேற்று முன் தினம் திடீரென தாக்குதல் நடத்தியது.

20க்கும் மேற்பட்ட ராணுவ நிலைகளை குறி வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மூலம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. குறிப்பாக ஈரான் தலைநகரான டெஹ்ரானில் அடித்தடுத்து வெடிச்சத்தம் கேட்டது.
அதே நேரத்தில் ஈரான் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் இஸ்ரேலின் தாக்குதலை முறியடித்ததாக ஈரான் ராணுவம் கூறியுள்ளது. ஈரானில் என்ன வகையான சேதங்கள் ஏற்பட்டது என்பது குறித்தான எந்த தகவலும் அப்போது வெளியாகவில்லை. அதே நேரத்தில் ஈரானில் விமான போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டது. மேலும் இஸ்ரவேல் நடவடிக்கைக்கு எதிராக பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் கூறியுள்ளது.
இந்த நிலையில் ஈரான் மீது நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் சில மணி நேரங்களில் முடிவுக்கு வந்ததாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ரியல் அட்மிரல் டேனியல் ஹகரி உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில்," இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் தாக்குதலுக்கு நாங்கள் பதிலடி கொடுத்தோம். அந்த பதிலடி முடிந்துவிட்டது. ஈரானில் ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தினோம். இதனால் இஸ்ரேலுக்கு எதிரான அச்சுறுத்தல் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலை தாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்" எனக் கூறியிருந்தார்.
அதே நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானுக்கு சேதங்கள் நடைபெற்றதாக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. குறிப்பாக சுமார் 3 மணி நேரம் நடந்த தொடர் தாக்குதலில் ஈரான் பயன்படுத்தி வந்த ஏவுகணைகள்,ட் ரோன்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் மற்றும் ரேடார் சாதனங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் 4 ஈரான் வீரர்களும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் உயிரிழந்த ஈரான் வீரர்களின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. அதில் ஈரான் மதத் தலைவர்கள், உயிரிழந்த வீரர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வீரர்களின் உறவினர்கள் அயத்துல்லா அலி கமேனியை சந்தித்தனர். இதனையடுத்து அவர்," ஈரான் எல்லைக்குள் அத்துமீறி இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி இருக்கின்றன. மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தியதாக இஸ்றேல் கூறி வருகிறது. ஆனால் பேரழிவு எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இஸ்ரேலின் இந்த அத்துமீறலை ஈரான் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் நம்மை குறித்து தப்பு கணக்கு போட்டுள்ளனர். இதனை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய நேரம். இது இதை நாம் நிச்சயம் செய்ய வேண்டும்.
இது நமது கடமை மட்டுமல்ல, உரிமையும் கூட.. நாட்டைக் காக்க இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் சில தவறால் மோசமான விளைவுகளை சந்தித்தோம். அதனை திருத்தி முன்னேறிச் செல்ல வேண்டிய நேரம் இது. நமது நாடு பொருளாதார மற்றும் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும். அமெரிக்காவும் உலக நாடுகளும் இஸ்ரேலை கண்டிக்க மறுக்கின்றன. இஸ்ரேல் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் ஓரணியில் திரள வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications