மண்டையை சொரியும் டிரம்ப்.. ஈரான் செய்த சம்பவம்! இந்தியாவுக்கு இன்னும் சிக்கல் தீரலையே
தெஹ்ரான்: ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை தகர்த்த அமெரிக்கா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் ஈரான் தனது புதிய ஏவுகணையை வெளியிட்டிருக்கிறது. இப்படி நடந்திருப்பது ஈரானுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா வந்ததற்கு காரணமே சர்வதேச அழுத்தம்தான். மறுபுறம் ஏவுகணை உருவாக்கப்பட்டிருப்பது தனது பாதுகாப்புக்குதான் என ஈரான் கூறியிருக்கிறது.

ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் தனது புதிய ஏவுகணையை நேற்று வெளியிட்டிருக்கிறது. 'காசிம் பாசிர்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் தன்மை கொண்டது. அதாவது பாலிஸ்டிக் வகையை சேர்ந்தது. இது திட எரிபொருளில் இயங்கும். பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசிர்சாதே கூறுகையில்,
"துல்லியமான வழிக்காட்டல் அமைப்பை கொண்டு இயங்கும் இந்த ஏவுகணை இலக்கை சரியாக தாக்கும் திறன் கொண்டது. இடைமறிப்புகளால் இதை தடுக்க முடியாது என்பது கூடுதல் சிறப்பு. ஜிபிஎஸ் கருவி இல்லாமலேயே இது இயங்கும். ஏப்.17ம் தேதி இதை சோதித்து பார்த்தோம். எதிர்பார்ப்புகளை இது பூர்த்தி செய்திருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
ஈரானுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்க அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கும் நேரத்தில் இந்த ஏவுகணை பற்றிய தகவல் வெளியாகியிருப்பது டிரம்ப்பை நிச்சயம் சூடாக்கும். இப்படி நடப்பது இந்தியா-ஈரான் இடையே வர்த்தக சிக்கலை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது.
இஸ்லாமிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே காலம் காலமாக பஞ்சாயத்து நீடித்து வருகிறது. குறிப்பாக ஈரானுடன் அமெரிக்காவின் பஞ்சாயத்து நெடியது. ஈரானில் எண்ணெய் வளம் அதிகம். அதை வைத்து பிழப்பு நடத்திகொண்டிருந்தது அந்நாடு. மறுபுறம் அமெரிக்காவின் தலைமையை ஏற்க மறுத்தது. எனவே இரு நாடுகளுக்கும் முட்டல் மோதல்கள் வெடித்தன. மூன்றாம் நாடுகள் பஞ்சயாத்தை பேசி தீர்க்க முன் வந்தன. அதன்படி ஈரான்-அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க கூடாது என்றும், அதற்கு பதிலாக ஈரானின் எண்ணெய் மற்றும் அதன் தயாரிப்புகளை உலக நாடுகள் வாங்கிக்கொள்ளலாம் என்று ஒப்பந்தம் கூறியது. எல்லாம் ஓகேவாக போய்க்கொண்டிருந்தபோதுதான் டிரம்ப் எனும் கலகக்காரர் உள்ளே நுழைந்தார். 2018ல், அமெரிக்கா இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். மட்டுமல்லாது ஈரானின் எண்ணெய்யை வாங்கும் நாடுகளுக்கு தடை விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.
இந்த இடத்தில்தான் இந்தியா மிகுந்த பாதிப்பை சந்தித்தது. அதாவது ஈரானிலிருந்து 2019க்கு முன்னர் வரை நாம் அதிக அளவில் கச்சா எண்ணெய்யை வாங்கியிருந்தோம். விலை குறைவு, தரம் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. அதேநேரம் சில சலுகைகளும் கிடைத்தன. மட்டுமல்லாது ஈரானிலிருந்து எண்ணெய்யை கொண்டுவருவது எளிது. இவை அனைத்தும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஏறாமல் பார்த்துக்கொண்டன. இப்போது எரிபொருள் விலை அதிகரித்திருக்கிறது.
மீண்டும் குறைய வேண்டும் எனில் சலுகை விலையில் கச்சா எண்ணெய் கிடைத்தால் சாத்தியமாகலாம். ஈரான் எண்ணெய் கிடைத்தால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையும். ஆனால் அதற்கு ஈரான் மீது விதித்த தடையை அமெரிக்கா நீக்க வேண்டும். இப்போது ஏவுகணை தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருப்பதால் அமெரிக்கா தடையை நீக்க யோசிக்கும். சுற்றி வளைத்து பார்த்தால் இந்தியாவுக்குதான் இதனால் நெருக்கடி.
-
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
கட்டம்கட்டப்பட்ட ஈரான்.. இஸ்ரேல் கைக்கு வந்த 1800 Mark 84 குண்டு.. டிரம்ப் பதிவின் மெகா பின்னணி! -
24 மணி நேரத்தில்.. உலக அரசியலே மாறுகிறது.. அமெரிக்கா - ஈரான் இடையே கையெழுத்தாகும் அமைதி ஒப்பந்தம் -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
அவசரமாக வான் வழியை மூடிய ஈரான்! முடிவுக்கு வரும் போர் நிறுத்தம்.. தாக்குதல் திட்டமிடும் டிரம்ப்! -
இன்னும் சில மணி நேரத்தில் நல்ல செய்தி.. டெல்லியில் நின்றபடி அமெரிக்கா அதிரடி! கவனிக்கும் உலக நாடுகள் -
அமெரிக்க போரில் மேஜர் திருப்பம்.. யுரேனியத்தை வழங்க ஈரான் ஒப்புதல்? பின்னணியில் நடப்பது என்ன? -
மிகப்பெரிய டவிஸ்ட்.. யுரேனியத்தை கைவிடும் ஈரான்.. அமெரிக்காவிடம் தாராளமாக விட்டுக் கொடுக்க முடிவு -
பிடுங்கப்படும் அதிபரின் பவர்.. ஈரான் போரில் படுதோல்வி? 3 மாதங்களை கடந்தும் திணறும் டிரம்ப்! -
நான் வந்துட்டேன்டா..மீண்டும் உச்சம் தொட போகும் தங்கம்! அந்த ஒரு வார்த்தைக்காக தான் உலகமே வெயிட்டிங்! -
அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்! -
"திறக்கப்படும் ஹார்முஸ்.." முடிவுக்கு வரும் அமெரிக்கா ஈரான் போர்.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு!












Click it and Unblock the Notifications