ஒரு கிராம் கூட கொடுக்க முடியாது.. டிரம்ப்-க்கு பல்பு கொடுத்த கமேனி.. ஈரானில் உச்சக்கட்ட பதற்றம்!
தெஹ்ரான்: ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் தொடரும் நிலையில், ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு மூலம் அமெரிக்கா விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஈரான் மீது மீண்டும் போர் தாக்குதலை நடத்த திட்டமிட்டு வரும் வேளையில் மொஜ்தபா கமேனி-யின் உத்தரவு டிரம்ப்-ஐ கோபப்படுத்தியுள்ளது.

யுரேனியம் தான் டார்கெட்
கடந்த 3 வாரங்களாக அமெரிக்கா - ஈரான் மத்தியிலான பேச்சுவார்த்தையில் முக்கிய விவாத பொருளாக இருப்பது ஈரான் நாட்டில் இருக்கும் யுரேனியம் தான். அமெரிக்கா தரப்பில் ஈரான் வைத்திருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவுக்கு அளித்தால் போரை நிறுத்திகொள்ளலாம் என தொடர்ந்து கூறிவருகிறது.
இந்த நிலையில் ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இன்று வெளியிட்டுள்ள முக்கிய உத்தரவில், ஈரானில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாட்டுக்கு அனுப்பக் கூடாது என அவர் தெளிவாக உத்தரவிட்டுள்ளார். இது அமெரிக்காவுக்கு மட்டும் அல்லாமல் மீடியேட்டராக இருக்கும் பாகிஸ்தானுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இஸ்ரேல்
இதேவேளையில் இஸ்ரேல் தரப்பிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் செய்ய வேண்டுமாயின், ஈரானின் உயர் செறிவு யுரேனியத்தை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்பதை கட்டாய நிபந்தனையாக வலியுறுத்தியுள்ளது.
3 நாடுகளும் ஷாக்
ஆனால் மொஜ்தபா கமேனி எத்தகைய அமைதி ஒப்பந்தம் செய்தாலும் ஒரு கிராம் கூட வெளியில் அனுப்ப முடியாது என அமெரிக்காக, இஸ்ரேல், பாகிஸ்தானுக்கு நெத்திப்பொட்டில் அடித்தார் போல் தெரிவித்துள்ளார். ஈரான் தலைவரின் இந்த நிலைப்பாடு சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
இந்த செய்தியின் தாக்கம் உடனடியாக உலக சந்தையில் தெரியத் தொடங்கியது. எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு மீண்டும் 100 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. ஏற்கனவே மத்திய கிழக்குப் பதற்றம் காரணமாக எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், இந்தப் புதிய அறிவிப்பு அதன் விலையை கூடுதலாக உயர்த்தியுள்ளது.
ஆலோசனை
ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாய் கூறுகையில், பாகிஸ்தான் மீடியேட்டர் செய்து நடத்தப்பட்ட பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அமெரிக்காவின் சமீபத்திய அமைதி பேச்சுவார்த்தை திட்டத்தை ஈரான் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்த வேளையில் தான் மொஜ்தபா கமேனி தனது அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.
அமெரிக்கா பொறுத்தவரையில் ஈரானை முழுமையாக சரணடையச் செய்ய வேண்டும் அல்லது டிரம்புக்கு முழுமையாகப் சாதகமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. இல்லையெனில் ராணுவ நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
இஸ்ரேல் கப்பலை கண்டதும் சுட உத்தரவு.. பாப் அல்-மன்டெப் கண்ட்ரோலில் எடுக்கும் ஹவுதி! -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர்












Click it and Unblock the Notifications