Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உத்தர பிரதேசத்தில் பிறந்தவரின் பேரன்.. ஈரான் உச்சபட்ச தலைவரின் பின்னணி.. சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடும் தாக்குதலை நேற்று தொடங்கியது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்சப்பட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் ஈரானில் மன்னராட்சி ஒழிந்து ஈரான் இஸ்லாமிக் குடியரசு நாடாக மாற காரணமே உத்தரபிரதேசத்தில் இருந்து அங்கு சென்றவர் தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இது உண்மை தான். அந்த நபர் யார்? அவருக்கும், ஈரானின் உச்சப்பட்ச தலைவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நேற்று போரை தொடங்கின. ஈரான் உச்சப்பட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். இதனை இஸ்ரேல் நேற்று உறுதி செய்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் இன்று உறுதி செய்தது.

iran-war-what-are-the-connection-between-uttar-pradesh-roots-of-irans-supreme-leaders-details-her

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அயதுல்லா அலி கமேனி தனது அலுவலக இல்லத்தில் நேற்று இருந்தார். அப்போது அங்கு அமெரிக்கா - இஸ்ரேல் நாடுகள் சேர்ந்து நடத்திய தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இந்திய வம்சாவளி

இந்நிலையில் தான் ஈரான் உச்சப்பட்ச தலைவருக்கும், நம் நாட்டின் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. புரியும்படி கூற வேண்டும் என்றால் ஈரானின் முதல் உச்சப்பட்ச தலைவர் இந்திய வம்சாவளியாவார்.

அதாவது ஈரானின் முதல் உச்சப்பட்ச தலைவரின் பெயர் அயதுல்லா ரூஹொல்லா கோமெனி. இவருக்கு பிறகு தான் 2வது உச்சபட்ச தலைவராக தற்போது கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனி வந்தார். இதில் அயதுல்லா ரூஹோல்லா கோமேனிக்கும், உத்தர பிரதேசத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

கோமேனி யார்?

அதாவது கடந்த 1979ம் ஆண்டு வரை ஈரானில் மன்னராட்சி தான் நடந்து வந்தது. அப்போது ஈரானை ஆட்சி செய்தவர் முகமது ரிசா பலவீ. இவர் வெளிநாட்டு தலைவர்களின் கைப்பாவையாக இருந்ததார். குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தலைவர்களின் பேச்சை கேட்டு செயல்பட்டு வந்தார். கைப்பாவையாக செயல்பட்டது, இஸ்லாமிய கொள்கைப்படி செயல்படாதத உள்ளிட்டவை ஈரானில் இருந்த பலருக்கும் பிடிக்கவில்லை.

இதையடுத்து அவருக்கு எதிராக ஈரானில் புரட்சி வெடித்தது. இந்த புரட்சி 1979ம் ஆண்டில் வெடித்தது. ஈரானில் இடதுசாரி அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும், ஈரானிய மாணவர் இயக்கமும் புரட்சியில் ஈடுபட்டன. இந்த புரட்சிக்கு தலைமை தாங்கியவரின் பெயர் அயதுல்லா ரூஹோல்லா கோமேனி (Ayatollah Ruhollah Khomeini). இந்த புரட்சி வெற்றியும் பெற்றது. மன்னராக இருந்த முகமது ரிசா பலவீ வீழ்த்தப்பட்டார். ஈரானில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

முதல் உச்சபட்ச தலைவர்

இந்த புரட்சியை முன்னின்றி நடத்திய அயதுல்லா ரூஹோல்லா கோமேனி ஈரானின் முதல் உச்சபட்ச தலைவர் ஆனார். ஈரான் , ‛ஈரான் இஸ்லாமிக் குடியரசு' என்று அழைக்கப்பட்டது. மன்னராட்சியில் இருந்து விடுபட்ட ஈரான் குடியரசு நாடாக செயல்பட தொடங்கியது. இதையடுத்து சட்டங்கள் கடுமையாக்கப்பட்டது. அதோடு அயதுல்லா ரூஹோல்லா கோமேனி தான் ஈரானின் நவீன சிற்பி என்று அழைக்கப்பட்டார்.

இதனால் தான் ஈரானில் எங்கு சென்றாலும் அயதுல்லா ரூஹோல்லா கோமேனியின் போட்டோக்கள் இருக்கும். ரூபாய் நோட்டு, பள்ளி வகுப்பறை, அரசு கட்டடங்கள் என திரும்பும் திசையெங்கும் அயதுல்லா ரூஹோல்லா கோமோனியின் போட்டோ இடம்பெற்றுள்ளது. இவர் ஷியா (முஸ்லிம்களில் ஒரு பிரிவு) நம்பிக்கையில் உறுதி கொண்டவர். இதனால் ஈரானை ஷியா இஸ்லாமியர்களின் நாடாக வளர்த்தார்.

தாத்தாவுக்கு உத்தர பிரதேசம்

இந்த அயதுல்லா ரூஹோல்லா கோமேனி தாத்தா உத்தர பிரதேசத்தின் கிண்டூர் கிராமத்தில் பிறந்தவர். அவரது பெயர் சையத் அகமது மூசாவி இந்தி. கி.பி. 1800-களில் கிண்டூரில் பிறந்தவர். 1830-ல் இந்தியாவை விட்டு வெளியேறிய அவர், ஈராக்கில் உள்ள நஜாஃப் சென்று, சியா பிரிவின் முக்கியமானவரான இமாம் அலியின் கல்லறையை பார்வையிட்டார்.

அதன்பிறகு ஈரானில் குடியேறினார். ஆனாலும் தனது இந்தியப் பூர்வீகத்தை குறிக்க 'இந்தி' என்ற பெயரை இணைத்து கொண்டார். இது இன்றும் ஈரானிய அதிகாரபூர்வ பதிவுகளில் உள்ளது.இந்த இந்திய தாத்தா சையத் அகமது மூசாவி ஷியா பிரிவை சேர்ந்தவர். அதில் தீவிரம் காட்டி வந்தார். இமாமாக மாறினார். அதன்பிறகு ஈரான் ஷியா மத சமூகத்தில் இணைந்து உயர்பதவிக்கு சென்றார். 3 திருமணங்கள் செய்தார். 5 குழந்தைகளை பெற்றார். அவர்களில் ஒருவர் தான் முஸ்தபா. இந்த முஸ்தபா கடந்த 1902ல் பிறந்தார். இந்த முஸ்தபாவின் மகன் தான் அயதுல்லா ரூஹோல்லா கோமேனி.

கோமேனிக்கு பின் காமேனி

அதாவது ஈரானில் மன்னராட்சிக்கு எதிராக புரட்சி செய்து ஈரானை இஸ்லாமிக் குடியரசு என அறிவித்து அதன் முதல் உச்சபட்ச தலைவராக பொறுப்பு வகித்தவர். உத்தர பிரதேசத்தில் பிறந்த சையத் அகமது முசாவி இந்தி ஈரானுக்கு செல்லாமல் இருந்திருந்தால் ஈரானுக்கு நவீன சிற்பியான ஈரான் இஸ்லாமிக் குடியரசின் முதல் உயர்மட்ட தலைவரான அயதுல்லா ரூஹோல்லா கோமேனி கிடைத்திருக்கமாட்டார்.

பிறகு அயதுல்லா ரூஹோல்லா கோமேனி கடந்த 1989 ல் மறைந்தார். இதையடுத்து தான் அயதுல்லா அலி கமேனி ஈரானின் உச்சபட்ச தலைவர் பொறுப்புக்கு வந்தார். 1989 முதல் இந்த பொறுப்பில் வகித்து வந்த அயதுல்லா அலி கமேனி தற்போது கொல்லப்பட்டுள்ளார்.

முன்னதாக அயதுல்லா அலி கமேனி முதல் உச்சபட்ச தலைவர் அயதுல்லா ரூஹோல்லா கோமேனியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். அவரை ஆசிரியராக ஏற்றுக்கொண்டார். இதையடுத்து தான் அயதுல்லா அலி கமேனி ஈரானின் 2வது உயர்மட்ட தலைவரானார். தற்போது அவரை இஸ்ரேல் - அமெரிக்கா கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+