ஹிஜாப் அணியவில்லையாம்.. யூடியூப்பில் பாடிய பாடகிக்கு ஈரான் கொடுக்கும் தண்டனை.. நீதித்துறை அறிவிப்பு
டெஹ்ரான்: ஈரானை சேர்ந்த பாடகி பரஸ்டு அஹமதி ஆன்லைன் கான்சர்ட் நிகழ்ச்சியில் ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய நிலையில் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்று அந்த நாட்டின் நீதித்துறை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள முக்கிய நாடுகளில் ஒன்று ஈரான். இஸ்லாமிய நாடாக அறியப்படும் இந்த நாட்டில் ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

பெண்கள் பொதுவெளியில் நடமாடும்போது ஹிஜாப் அணிய வேண்டும். மேலும் இதனை மீறுவோருக்கு சிறை தண்டனை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் ஈரான் நாட்டை சேர்ந்த பாடகி பரஸ்டு அஹமதிக்கு ரசிகர்கள் உள்ளனர். கடந்த 11ம் தேதி பரஸ்து அஹமதி ஆன்லைனில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். பரஸ்டு அஹமதி உடன் மொத்தம் 4 பேர் கொண்ட இசைக்குழு இந்த நிகழ்ச்சியை நடத்தியது.
இதில் பரஸ்டு அஹமதி கருப்பு நிற ஆடை அணிந்து ஹிஜாப் அணியாமல் பாடல்கள் பாடியுள்ளார். முன்னதாக அந்த வீடியோவில், அவர், ‛‛நான் பரஸ்டு. எனக்கு பாடல்கள் பாடுவதில் ஆர்வம் அதிகம். ஆனால் நாட்டில் பாட்டு பாட முடியாத நிலை உள்ளது. இருப்பினும் நாட்டுக்காக என் ஆசையை கைவிட முடியாத பெண்ணாக இந்த கச்சேரியை நடத்துகிறேன்'' என்று கூறியிருந்தார்.
அதாவது ஈரான் நாட்டில் பொதுவெளியில் பெண்கள் பாட அனுமதியில்லை. அதேபோல் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயமாக உள்ளது. இருப்பினும் ஈரானின் இந்த உத்தரவை பரஸ்டு அஹமதி விரும்புவது இல்லை. இதனால் தான் அவர் ஹிஜாப் அணியாமல் பாடல் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரானில் ஹிஜாப் அணியாத காரணத்தினால்
மாஷா அமினி என்ற பெயர் கொண்ட பெண் போலீஸ் கஸ்டடியில் இறந்தார். இந்த சம்பவம் ஈரான் முழுவதும் பெண்களை கொதிப்படைய வைத்தது. அப்போது அதனை எதிர்த்து பரஸ்டு அஹமதி பாடல் பாடியிருந்தார். இந்நிலையில் தான் தற்போது பரஸ்டு அஹமதி விவகாரம் ஈரானில் சர்ச்சையாகி உள்ளது.
இதுபற்றி ஈரான் நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது. நீதித்துறை சார்பில் மிஷான் ஆன்லைன் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‛‛பாடகி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்படி அவர் மீது அவரது இசைக்குழு மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்''என்று கூறியுள்ளார்.
ஈரானை பொறுத்தவரை 1979 ம் ஆண்டு முதல் பெண்கள் பொதுவெளியில் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொதுவெளியில் பெண்கள் பாட்டு பாடவும் தடை உள்ளது. இத்தகைய சூழலில் தான் பரஸ்டு அஹமதி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் நீதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications