"பேரழிவு!" பிராந்திய போராக மாறும் இஸ்ரேல் ஹமாஸ் சண்டை? உலக நாடுகள் உள்ளே வருதே.. அடுத்து என்ன
வாஷிங்டன்: இஸ்ரேல் ஹமாஸ் போர் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வரும் நிலையில், அங்கு சமீப காலங்களில் நடக்கும் மாற்றங்கள் அங்கே ஒரு பிராந்திய போரை உருவாக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து நடந்து வருகிறது. காசாவில் இருக்கும் ஹமாஸ் படை மீது இஸ்ரேல் சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இடையில் சில நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த போதிலும், மீண்டும் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போதைய சூழலில் அங்கே போர் முடியும் நிலை உருவாகவில்லை.
அபாயம்: அதேநேரம் இந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் பிராந்திய போராக மாறும் அபாயம் உருவாகியுள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மற்றும் ஈராக் ஆதரவு பெற்ற ஹவுதி படை ஹமாஸ் படைக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது.. இதன் காரணமாக மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வருகிறது..
இஸ்ரேல் போர் தொடர்ந்து வருகிறது.. காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் இப்படிக் காசா போர் தொடரும் நிலையில், மற்றொருபுறம் இதுபோல லெபனான், ஹிஸ்புல்லா மீதும் தாக்குதல்கள் நடப்பதால் இந்த மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதியே இல்லாத ஒரு சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்க கப்பலை சுற்றி வளைத்த ஹவுதி படகுகள்.. அடுத்து நடந்த பரபர சம்பவம்.. செங்கடலில் பரபரப்பு
சிக்கல்கள்: கடந்த செவ்வாய்க்கிழமை பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் கோட்டையில் ஹமாஸ் தலைவர் சலே அல்-அரூரி வான்வழித் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் தான் நடத்தியதாக லெபனான், ஹமாஸ் மற்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் இஸ்ரேல் தனது ஈடுபாட்டை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. இருப்பினும், கடந்த காலங்களில் ஆரூரி முக்கிய குற்றவாளி என்றும் அவர் தேடப்பட்டு வரும் ஒரு நபர் என்றும் கூறியிருந்தது.
அதேநேரம் ஈரானில் கடந்த புதன்கிழமை காசிம் சுலைமானியின் நினைவிடத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் சுமார் 103 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த குண்டுவெடிப்பில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதற்கிடையே ஈரானில் நடந்த இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் ஜிஹாதி குழு பொறுப்பேற்றுள்ளது.
பதற்றம் அதிகரிப்பு: அதேபோல மற்றொரு சம்பவத்தில் பாக்தாத்தில் நடந்த டிரோன் தாக்குதலில் ஈரான் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு அமெரிக்காவே காரணம் என்று ஈராக் மற்றும் ஈரான் சார்பு ஹஷெட் அல்-ஷாபி துணை இராணுவக் குழு குற்றஞ்சாட்டியது. இதுபோன்ற சம்பவங்கள் அங்கே பதற்றத்தை அதிகரிக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க ஏமனின் ஹவுதி படை செங்கடல் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உலக வர்த்தகத்தில் சுமார் 12 சதவீதம் இந்த செங்கடல் பகுதியில் தான் நடக்கிறது. இங்கே ஹவுதி படை தாக்குதல் நடத்துவது நிலைமை மேலும் மேலும் சிக்கலான ஒன்றாக மாற்றுகிறது.
உண்மையில் என்ன நிலை: ஈரான் அல்லது ஹிஸ்புல்லா படை தற்போதைய சூழலில் முழு வீச்சில் போருக்குச் செல்லாது என்ற போதிலும் பிராந்திய உறவுகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றத்தை இது அதிகரிக்கும்... இதனால் எங்குப் பிராந்திய போரை உருவாகுமோ என்று அஞ்சப்படுகிறது. இப்படியொரு சிக்கலான சூழல் அங்கே நிலவும் நிலையில், ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு நான்காவது முறையாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் இந்த பிராந்தியத்திற்குச் செல்லவுள்ளார். அதன் பிறகாவது அங்கே அமைதி திரும்புமா என்பதை நாம் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications