சீனா, துருக்கியை விடுங்க.. பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் இன்னொரு நாடு தெரியுமா? ஜெய்சங்கர் செக்
ஆம்ஸ்டர்டம்: சீனா, துருக்கியை போல் பாகிஸ்தானுக்கு அதிக ஆயுதங்கள் வழங்கும் இன்னொரு நாடாக நெதர்லாந்து உள்ளது. பாகிஸ்தானின் கடற்படைக்கு, நெதர்லாந்து அதிகப்படியான ஆயுதங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் தான் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சண்டை நிறுத்தப்பட்ட பிறகு முதல் முறையாக நெதர்லாந்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதையடுத்து நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தானை பந்தாடியது.

நம் நாட்டின் ஏவுகணைகள் பாகிஸ்தான் உள்ளே புகுந்து பயங்கரவாதிகளின் 9 முகாம்கள், விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. அதன்பிறகு பாகிஸ்தான் கெஞ்சியதால் மோதலை நிறுத்த நம் நாடு அனுமதியளித்தது. இதையடுத்து எல்லையில் அமைதி நிலவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகள் நம்நாட்டை கண்டித்தன. ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து இருநாடுகளுடனான வர்த்தக உறவை நம் நாட்டை சேர்ந்த தொழில் நிறுவனத்தினர் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். அதேபோல் துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு சுற்றுலா செல்வதை நம் நாட்டை சேர்ந்தவர்கள் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது இன்னொரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாகிஸ்தானுக்கு சீனா 81 சதவீதம் ஆயுதங்களை வழங்கிவருகிறது. அதேபோல் துருக்கியும் ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கி வருகிறது. இது நமக்கு தெரியும். ஆனால் சீனாவுக்கு அடுத்தப்படியாக துருக்கியை முந்தி பாகிஸ்தானுக்கு ஒரு நாடு ஆயுதங்களை வழங்கி வருகிறது. இது நம்மில் பலருக்கும் தெரியாது. அந்த நாட்டின் பெயர் தான் நெதர்லாந்து. இதுதான் சீனாவிற்கு பிறகு பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கும் இரண்டாவது பெரிய நாடாகும்.
பாகிஸ்தானை எடுத்து கொண்டால் பாதுகாப்பு துறையில் சீனா அதிகமாக சப்ளை செய்கிறது. இரண்டாவது இடத்தில் நெதர்லாந்து, 3வது இடத்தில் துருக்கி உள்ளது. பாகிஸ்தானின் ஆயுதத்தில் 81 சதவீதம் சீனா வழங்கி உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக நெதர்லாந்து 5.5 சதவீத ஆயுதத்தையும் துருக்கி 3.8 சதவீத ஆயுதத்தையும் வழங்கி வருகிறது. இது 2020 முதல் 2024 வரையிலான 5 ஆண்டு தரவாகும். நெதர்லாந்தை எடுத்து கொண்டால் பாகிஸ்தானின் கடற்படைக்கு அதிக ஆயுதங்களை வழங்கி வருகிறது.
இந்நிலையில் தான் நெதர்லாந்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார். அதாவது நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வந்த பிறகு ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டென்மார்க், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் சென்றார். இது 6 நாள் சுற்றுப்பயணமாகும். இந்த சுற்றுப்பயணத்தில் மே 19 ம்தேதி ஜெய்சங்கர் நெதர்லாந்து சென்றார். அங்கு அவர் நெதர்லாந்தின் பிரதமர், வெளியுறவு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் உள்ளிட்டவர்களை சந்தித்தார்.
இதுதொடர்பாக ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில், '‛இன்று ஹேக்கில் பிரதமர் டிக் ஸ்கோப்பை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடியின்அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன், பயங்கரவாதத்திற்கு எதிரான நெதர்லாந்தின் உறுதியான நிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவித்தேன். இந்தியா-நெதர்லாந்து கூட்டாண்மையை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதற்கான அவரது உறுதிப்பாட்டை நான் பாராட்டுகிறேன். இந்த இலக்குகளை அடைய இருநாடுகளும் கடுமையாக உழைக்கும் என்று நான் நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் ஜெய்சங்கரின் இந்த சுற்றுப்பயணத்தின் பின்னணியில் பாகிஸ்தானுக்கு செக் வைக்கும் நடவடிக்கை இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது பஹல்காம் தாக்குதலை நெதர்லாந்து கண்டித்தது. அதன்பிறகு நம் நாடு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கியபோது போரை நிறுத்த வேண்டும் என்று கூறியது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துவதாக எதுவும் தெரிவிக்கவில்லை. இதனை மனதில் வைத்து ஜெய்சங்கர் நெதர்லாந்துக்கு பயணித்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு பாகிஸ்தான் உடனான வர்த்தகத்தை நிறுத்துங்கள் என்பதை சொல்லாமல் சொல்வதற்கான முதல் ஸ்டெப்பை நம் நாடு எடுத்துள்ளது.
அதாவது நம் நாட்டுக்கும் நெதர்லாந்துக்கும் இடையே 22 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெறுகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தானை எடுத்து கொண்டால் மொத்த ஐரோப்பாவுடன் 15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மட்டும் தான் வர்த்தகம் செய்து வருகிறது. இதனால் பாகிஸ்தானை விட
இந்தியா தான் நெதர்லாந்துக்கு முக்கியமானதாக உள்ளது. இதனை நினைவு கூறும் வகையில் தான் ஜெய்சங்கர் நெதர்லாந்துக்கு சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் நெதர்லாந்து நம் நாட்டின் பாதுகாப்பு துறையில் கால்பதிக்க விரும்புகிறது. இதனை வழங்க நம் நாடும் ஆர்வமாக உள்ளது. இதனால் நெதர்லாந்தை நம் பக்கம் இழுத்து பாகிஸ்தானை தனித்து விட நம் நாடும் விரும்புகிறது. இது நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு என்பது ஏற்படும். குறிப்பாக கடற்படை துறையில் நெதர்லாந்துக்கு பதில் மாற்று நாட்டை பாகிஸ்தான் அணுக வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications