ஏமன் அதிபர் மாளிகை அருகில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: 8 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஏமன் அதிபர் மாளிகை அருகே ஐ.எஸ் தீவிரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப்படை தாக்குதலில் 8 பேர் பலியாகி உள்ளனர்.

வளைகுடா நாடான ஏமன் நாட்டில் அதிபர் அபத் ரப்போ மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிபர் மாளிகை அருகில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

 Islamic State claims attack on Yemen president's residence

உயிரிழந்தவர்களில் ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உள்ளதாகவும் மேலும் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் ஆளுநர் அய்தரஸ் அல்-ஜூபாய்தியை குறி வைத்து அவரது பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் அப்போது அல்-ஜூபாய்தி இல்லை என்று கூறப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஜூபாய்தி மீது தாக்குதல் நடத்துவதற்காக ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில் நடத்தப்பட்டது. இவருக்கு முன்பாக இருந்த ஜாபர் சாட் கொல்லப்பட்டதை அடுத்து இவர் கடந்த டிசம்பர் மாதம் பதவிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+