ஆதாரமே இருக்காது.. அப்படியே ஆவியாக்கப்பட்ட மக்கள்.. "கொடூர அரக்கனை" காசாவில் இறக்கிய இஸ்ரேல்
டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தியது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே மக்களை ஆவியாக்கும் வகையிலான ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வகை ஆயுதங்களால் ஒருவர் இருந்த அடையாளமே தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மத்திய கிழக்கில் காசா மீது கடந்த சில ஆண்டுகளாகவே இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதலை நடத்தி வந்தது. இந்தத் தாக்குதலில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே காசா மீது நடத்திய தாக்குதல்களில் தடை செய்யப்பட்ட அதி-வெப்ப ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆவியாக்கப்பட்ட மக்கள்
இதன் மூலம் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் மக்களை அது நொடியில் ஆவியாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அல் ஜசீரா ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அக்டோபர் 2023 முதல் சுமார் 2,842 பேர் காணாமல் போய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காசா சிவில் பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பசல் கூறுகையில், "ஒவ்வொரு வீட்டிற்கும் நாங்கள் நேரடியாகச் செல்கிறோம். அங்கு எத்தனை பேர் வசிக்கிறார்கள். தாக்குதலுக்குப் பிறகு எத்தனை பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்பதை ஒப்பிடுகிறோம். அதாவது ஐந்து பேர் வசிக்கும் ஒரு குடும்பத்தில் மூன்று சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டால்.. மீதமுள்ள இருவர் காணாமல் போனவர்களாகக் கருதப்படுவர். முழுமையான தேடலுக்குப் பிறகும், சுவர்களில் ரத்தத் துளிகள் அல்லது உடல் பாகங்கள் போன்ற சிறிய உயிரியல் தடயங்களைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே, அவர்கள் ஆவியாக்கப்பட்டவர்களாகக் கருதுவோம்" என்றார்.
தெர்மோபாரிக் வெடிகுண்டுகள்
இதற்காக இஸ்ரேல் தெர்மோபாரிக் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இந்த வகை வெடிகுண்டுகள் வெடிக்கும்போது மிக தீவிரமான வெப்பம் உருவாகும். மேலும், அதிதீவிரமான பிரஷர் உருவாகும். இந்த வகையான வெடிகுண்டுகள் காசா மக்களைக் கொல்வது மட்டுமின்றி.. உடல் இருந்ததற்கான சான்றுகளை அழித்துவிடும் என்று ராணுவ நிபுணர் வாசிலி ஃபெட்டிகரோவ் தெரிவித்துள்ளார்.
இந்த வெடிகுண்டுகள் இரண்டு ஸ்டேஜ்களில் நடக்குமாம். முதலில் அவை எரிபொருளைக் காற்றில் பரப்புகின்றன. அடுத்த ஸ்டேஜில் தான் குண்டு வெடிக்கும். ஏற்கனவே காற்றில் எரிபொருள் கலந்து இருக்கும் சூழலில், அது காற்றையும் ஆக்ஸிஜனையும் உள்வாங்கிக் கொள்கிறது. அப்போது சுமார் 3,500 டிகிரி செல்சியஸ் வரை மிக அதீத வெப்பம் உருவாகும். இதில் அருகே இருக்கும் அனைவரும் எரிந்து ஆவியாவார்கள். இதில் சிக்கும் நபர்கள் இருந்த அடையாளமே தெரியாமல் அழிந்து போவார்கள்.
அதீத வெப்பம்
இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "இந்த வெடிகுண்டு எரியும் நேரத்தை நீட்டிக்க, ரசாயனக் கலவையுடன் அலுமினியம், மெக்னீசியம் மற்றும் டைட்டானியம் பவுடர்களை சேர்கிறார்கள். அப்போது 2,500 முதல் 3,000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும். பெரும்பாலும் TNT மற்றும் அலுமினியம் பவுடர் கலந்து இதை உருவாக்குகிறார்கள்" என்கிறார்கள்.
இந்த வகையான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கு காசாவில் உள்ள அல்-தாபின் பள்ளி வளாகத்தை ஓர் உதாரணமாக அல் ஐசீரா அறிக்கை குறிப்பிடுகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அங்கிருந்தவர்களின் உடல்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என அவர்கள் குடும்பத்தினர் கூறுகிறார்கள்..
ஆதாரமே இருக்காது
காசாவில் உள்ள பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் முனீர் அல்-பர்ஷ் இது தொடர்பாகக் கூறுகையில், "நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ் ஆகும். அதேநேரம் ஒரு உடல் 3,000 டிகிரிக்கும் அதிகமான வெப்ப ஆற்றலுடன், பெரும் பிரஷரை எதிர்கொள்ளும்போது உடலில் இருக்கும் திரவங்கள் உடனடியாகக் கொதிக்கும். திசுக்கள் ஆவியாகி சாம்பலாகிவிடும்" என்றார்.
இதுபோன்ற தெர்மோபாரிக் ஆயுதங்களின் பயன்பாடு சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களால் நிர்வகிக்கப்படுகிறது. பொதுமக்களை மீது இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தவே கூடாது என்று கடுமையான விதிமுறைகள் உள்ளன. இருப்பினும், அதையும் தாண்டி இஸ்ரேல் இந்த வகை ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக வெளியான தகவல் கவலையை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications