போருக்கு ரெடியாகுங்கள்.. இஸ்ரேல் மீது அதிகாரபூர்வமாக போரை அறிவிக்கும் ஈரான்.. பெரிய யுத்தம் வருது

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: இஸ்ரேல் சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தரப்போவதாக தகவல்கள் வருகின்றன. இதற்காக ஈரான் பல்வேறு ஏவுகணைகளை எல்லை நோக்கி கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. #OpTruePromise3 என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளது. இதற்காக ஈரான் ராணுவம் ல்வேறு ஏவுகணைகளை சுரங்கங்கள் வழியாக கொண்டு செல்ல தொடங்கி உள்ளது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தும் என்று கூறப்படுகிறது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில்.. இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி தாக்குதலை நடத்த உள்ளதாம்.

Israel Iran

இஸ்ரேலின் விடாத அட்டாக்

இத்தனை நாட்கள் ஈரான் அமைதியாக இருந்தது.. ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளை வைத்து proxy war.. அதாவது நேரடியாக போர் நடத்தாமல் மறைமுகமாக இஸ்ரேலை தாக்கி வந்தது. இதற்கு இடையில்தான் கடந்த மாதம் தொடக்கத்தில்.. மிகப்பெரிய அளவில் இஸ்ரேலை நேரடியாக ஈரான் தாக்கியது.

இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது. சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்.. ஈரானின் ரேடார் சிஸ்டங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஈரான் உள்ளே வரக்கூடிய போர் விமானங்களை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படலாம் என்கிறார்கள்.

அதோடு இல்லாமல்.. ஈரான் தங்களின் சொந்த போர் விமானங்களை ரேடார் மூலம் வழிகாட்ட முடியாத நிலை ஏற்படலாம் என்கிறார்கள். சமீபத்தில்தான் ஈரான் மீது இஸ்ரேலின் மூன்று துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.

குறிப்பாக ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல்.. ராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது இஸ்ரேல். அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்களை தவிர்த்து.. மேற்கொண்டு மோதல் தவிர்க்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த முறை ராணுவ இலக்குகள் + அணு மையங்கள் + எண்ணெய் உற்பத்தி மையங்கள் + முக்கிய தலைவர்கள் என்று எல்லோரையும் குறி வைத்து ஈரானில் இஸ்ரேல் தாக்கி உள்ளது.

ஈரான் பதிலடி தாக்குதல்

இஸ்ரேல் சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தரப்போவதாக தகவல்கள் வருகின்றன. இதற்காக ஈரான் பல்வேறு ஏவுகணைகளை எல்லை நோக்கி கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் அதிகாரபூர்வமாக போர் அறிவிப்பை வெளியிடும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஒரு சில நாட்களில் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் உயர்மட்ட வட்டாரம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்கிய நிலையில் அதற்கு ஈரான் மீண்டும் பதிலடி கொடுக்க முடிவு செய்து உள்ளதாம். அதன்படி ஈரான் நாட்டு அரசு தனது ராணுவ வீரர்களிடம் போருக்கு தயாராகும்படி உத்தரவிட்டு உள்ளதாம். போர் தொடர்பாக முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாம் . மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் விமானப்படை ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவின் உதவி இல்லாமலே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரானுக்கு வடகிழக்கே வெடிச்சத்தம் கேட்டதாக ஈரான் அரசு செய்தி நிறுவனமான நூர் நியூஸ் உறுதிப்படுத்தியது. இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தத் தாக்குதல்கள் 10க்கும் மேற்பட்ட அணு மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ஈரான் சில நாட்களில் 15 அணு குண்டுகளை உருவாக்கும் அளவுக்குப் போதுமான பொருட்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய இரண்டு அமெரிக்க அதிகாரிகள், "இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது" என்பதை உறுதிப்படுத்தினர். மேலும் "இஸ்ரேலின் இந்த தாக்குதலில் அமெரிக்காவின் ஈடுபாடு அல்லது உதவி எதுவும் இல்லை" என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+