500 பேரை பலி கொண்ட இஸ்ரேல் தாக்குதல்..திடீரென திசை திரும்பும் உலகம்- மருத்துவமனை யாருடையது தெரியுமா?
டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் காஸாவில் அப்பாவி பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானப் படை குண்டுமழை பொழிந்ததில் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். தற்போது உலக நாடுகள் பெரும்பாலும் இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
காஸாவின் Al-Ahli Baptist Hospital- இந்த மருத்துவமனைதான் இஸ்ரேல்- ஹமாஸ் ஜிஹாதிகள் இடையேயான யுத்தத்தில் சிக்கிய பல்லாயிரம் அப்பாவிகள் தஞ்சமடைந்திருந்த அகதிகள் முகாம். இந்த மருத்துவமனையை இலக்கு வைத்து செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேலிய விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. சில நிமிடங்களிலேயே இந்த மருத்துவமனை தரைமட்டமானது.

இஸ்ரேலின் இந்த திடீர் தாக்குதலில் அகதிகளாக தஞ்சமடைந்த 500க்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் இந்த தாக்குதல் ஹமாஸ் ஆதரவு நாடுகளை மட்டுமல்ல.. ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிரவைத்துள்ளன.
இஸ்ரேலின் இத்தாக்குதலை ஐநா அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் Al-Ahli Baptist மருத்துவமனையானது Anglican Church நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் கிறிஸ்தவ தேவாலய நிர்வாகங்களும் இஸ்ரேலின் தாக்குதலை பகிரங்கமாக கண்டித்து வருகின்றன. இதனையடுத்து இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலின் இந்த போக்கையும் கொடும் தாக்குதலையும் கண்டிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அதிபர் ஜோ பிடன் இஸ்ரேலுக்கு வரும் நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதுவும் கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்திய மருத்துவமனை மீதான தாக்குதல் இஸ்ரேலை ஒட்டுமொத்த உலகத்துக்கு எதிராக திருப்பிவிட்டிருக்கிறது. காஸா மீதான 11-வது நாள் யுத்தம் இப்படி ஒரு பெரும் துயரத்தையும் திருப்பத்தையும் எதிர்பார்த்திருக்காது. இதனால்தான் இஸ்ரேல் இப்போது, ஹமாஸ் பயங்கரவாதிகள் ஏவிய ஏவுகணை தவறுதலாக வெடித்து சிதறி மருத்துவமனை மீது விழுந்துவிட்டதாக பதறியடித்து விளக்கம் தருகிறது.
இஸ்ரேலின் இந்த உக்கிரத் தாக்குதலைக் கண்டித்து பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஜோர்டானில் இஸ்ரேல் தூதரகமே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேலின் இந்த யுத்தத்தின் போக்கும் தீவிரமும் குறையும் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications