வெடிக்கும் மிக பெரிய போர்? பாலஸ்தீனத்தில் இறங்கும் இஸ்ரேல்! காசாவை முழுமையாக கைப்பற்ற ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்தப் போரால் காசாவில் உள்ள அப்பாவி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே ஹமாஸை முழுமையாக அழிக்கக் காசா பகுதியை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டத்திற்கும் இப்போது இஸ்ரேல் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த 2023 அக்டோபர் மாதம் இஸ்ரேல் படைகள் மீது ஹமாஸ் யாருமே எதிர்பார்க்காத வகையில் மோசமான தாக்குதலை நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் வெடித்தது. காசாவில் உள்ள ஹமாஸை முழுமையாக அழிப்போம் என கூறி, இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

Israel Cabinet Greenlights Plan to Capture Gaza Displace Palestinians

காசாவில் இறங்கும் இஸ்ரேல்

இதற்கிடையே காசா பகுதியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், காசா பகுதியிலேயே இஸ்ரேல் படை தொடர்ந்து இருக்கும் என்றும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டம் அப்படியே செயல்படுத்தப்பட்டால்.. பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலின் ஆதிக்கம் பெரியளவில் அதிகரிக்கும். ஏற்கனவே, அங்கு மனிதாபிமான நெருக்கடி நிலவும் சூழலில், அதை இன்னும் மோசமாக்கும். நேற்று இஸ்ரேலில் நடந்த பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தில் ரிசர்வில் இருந்த தனது ஆயிரக்கணக்கான ரிசர்வ் வீரர்களைப் பணிக்கு அழைத்திருந்தது. அது நடந்து சில மணி நேரத்தில் இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது.

நிலைமை மோசமாகும்

ஹமாஸ் வசம் இருக்கும் பணயக் கைதிகளை விடுவிக்கவும் இஸ்ரேல் நிபந்தனைகளை ஏற்றுப் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தவும் ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்கவே நெதன்யாகு அரசு இதுபோன்ற நடவடிக்கைகளைக் கையாள்கிறது. காசா பகுதியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலம் ஹமாஸை வீழ்த்த முடியும் என்று நெதன்யாகு அரசு நம்புகிறது. மேலும் இதனால் பல லட்சம் பாலஸ்தீனியர்கள் தெற்கு காசாவிற்கு தள்ளப்படுவார்கள்.

இஸ்ரேல்

கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் அதிபராகப் பதவியேற்கும் முன்பு இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்தத்தை அறிவித்தன. அமைதிக்குத் திரும்ப விரிவான பிளானை இவர்கள் அறிவித்திருந்தனர். அமெரிக்கா இந்தப் போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்திருந்தது. இருப்பினும், கடந்த மார்ச் மாதம் திடீரெனப் போர் நிறுத்தம் முறிந்தது. அதைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் வாழும் பகுதியில் இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சில வாரங்களில் காசாவின் பல பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது. இதில் காசா மக்களின் உயிரிழப்புகளும் பெரியளவில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்போதே காசாவின் 50 சதவீதப் பகுதி இஸ்ரேல் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இது வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கவே செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவதற்கு முன்பே உணவு, எரிபொருள் மற்றும் தண்ணீர் உட்பட காசாவிற்கு செல்லும் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் நிறுத்தியிருந்தது. இது அங்கு மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.

இஸ்ரேல் அதிகாரிகள் சொல்வது என்ன

இது தொடர்பாக இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகையில், "காசாவை கைப்பற்றுவதும், அந்தப் பகுதிகளைத் தக்கவைத்துக்கொள்வதும் தான் தற்போதைய திட்டம்.. இதன் மூலம் மனிதாபிமான உதவிகள் ஹமாஸ் வசம் செல்வதும் தடுக்க முடியும். இது காசாவில் ஹமாஸின் செல்வாக்கைப் பலவீனப்படுத்தும். ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்துச் சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். அதேநேரம் ஒரே அடியாக காசாவில் இஸ்ரேல் ராணுவம் இறங்காது. இந்தத் திட்டம் படிப்படியாகவே செயல்படுத்தப்படும்" என்றார்.

சர்வதேச நாடுகள் அனுப்பும் மனிதாபிமான உதவிகளை காசாவில் உள்ள மக்களுக்குத் தராமல் ஹமாஸ் தன்வசமே வைத்துக் கொள்வதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியிருந்தது. இதையே காரணமாகச் சொல்லி மனிதாபிமான உதவிகள் காசாவுக்கு செல்வதையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+