குண்டுவெடிப்பில் பறிபோனது.. ஈரான் தலைவர் கமேனி ஒரு கையை மட்டுமே பயன்படுத்துவது ஏன் தெரியுமா? சோகம்
டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் போர் முடிவுக்கு வந்துவிட்டது. இருப்பினும் இந்த போரில் இஸ்ரேல், அமெரிக்கா தாக்கினாலும் கூட அடிபணியாமல் ஈரான் சண்டையிட்டு வந்தது. இதற்கு ஈரான் உயர்மட்ட தலைவராக இருக்கும் அயதுல்லா அலி கமேனி தான் காரணம். இந்நிலையில் அயதுல்லா அலி கமேனி எல்லாவற்றுக்கும் தனது ஒரு கையை மட்டுமே பயன்படுத்தி வருகிறார். இன்னொரு கையை ஒருபோதும் பயன்படுத்துவது இல்லை என்பது பலருக்கும் தெரியாது. அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் போராக மாறியது. இந்த போர் 12வது நாளில் இன்று முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அதற்குள் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. ஈரானில் உள்ள 3 யுரேனியம் செறிவூட்டும் மையங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்கியது.

இதற்கு ஈரான் நேற்று பதிலடி கொடுத்தது. கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இஸ்ரேல் - ஈரான் ஆகியவற்றுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியது. இதையடுத்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
இதில் இஸ்ரேலை எடுத்து கொண்டால் ஈரானை விட பொருளாதாரத்தில் பெரிய நாடாகும். தொழில்நுட்பத்திலும் சிறந்த நாடாக உள்ளது. அதேபோல் அமெரிக்கா வல்லரசு நாடாகும். அந்த நாட்டிடம் இல்லாத ஆயுதங்களே இல்லை என்று கூறலாம். இப்படி இஸ்ரேல், அமெரிக்கா இரண்டு நாடுகள் நடத்திய தாக்குதலை சமாளித்து 12 நாட்கள் தாக்குப்பிடித்துள்ளது ஈரான். இதற்கு முக்கிய காரணம் அந்த நாட்டின் உயர்மட்ட தலைவராக உள்ள அயதுல்லா அலி கமேனி தான்.
ஈரான் யாருக்கும் பயப்படாது. இஸ்ரேல் தாக்கினால் பதிலடி கொடுப்போம். அமெரிக்காவிடம் அடி பணியமாட்டோம் என்று அவர் தான் சூளுரைத்தார். மேலும் இஸ்ரேல், அமெரிக்கா தன்னை கொல்லலாம் என்பதால் அவர் பதுங்கு குழியில் குடும்பத்துடன் பதுங்கினார். ஆனாலும் கூட அவர் சரணடையவில்லை. இஸ்ரேலில் சரணடைய கூறி டிரம்பின் கூற்றை அயதுல்லா அலி கமேனி ஏற்கவில்லை. இதன்மூலம் கடந்த சில நாட்களாக அயதுல்லா அலி கமேனி உலக நாடுகளின் செய்தித்தாள்களில் தலைப்பு செய்தியானார்.
இந்நிலையில் தான் அயதுல்லா அலி கமேனி பற்றி பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் வெளியாகி உள்ளது. அதாவது அயதுல்லா அலி கமேனி தனது எல்லா வேலைகளுக்கும் ஒரு கையை மட்டுமே பயன்படுத்தி வருவது பலருக்கும் தெரியாது. ஏனென்றால் அயதுல்லா அலி கமேனியின் ஒரு கை செயலிழந்து விட்டது. அதற்கு திடீரென்று நடந்த குண்டு வெடிப்பு தான் காரணமாகும். இந்த சம்பவம் கடந்த 981 ம் ஆண்டு ஜூன் மாதம் 27 ம் தேதி நடந்தது.
அப்போது ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அபுசார் மசூதியில் அயதுல்லா அலி கமேனி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் அருகே ‛டேப் ரெக்கார்டரை' ஒருவர் வைத்தார். அது ‛டேப் ரெக்கார்டர்' தானே என அயதுல்லா அலி கமேனி அதனை விட்டுவிட்டார். ஆனால் அதன் உள்ளே வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்தது.
இந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் அயதுல்லா அலி கமேனி படுகாயமடைந்து தரையில் விழுந்தார். இதில் அவரது வலது கை செயலிழந்தது. இதனால் தான் அவர் தனது வலதுகையை பயன்படுத்துவது இல்லை. பொதுவெளியில் உரை நிகழ்த்தும் போதும் அவர் தனது இடது கையை மட்டுமே பயன்படுத்தி வருகிறார். மேலும் செயலிழந்த வலதுகையின் மேல் ஆடை அணிந்து மறைப்பதை அவர் வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications