ஹமாசின் பாதாள உலகம்.. சுரங்கங்களை அட்டாக் செய்ய இஸ்ரேல் கையில் எடுக்கும் ரகசிய ஆயுதம்?
டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. எனினும், காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு உள்ள சுரங்கங்கள் இஸ்ரேலுக்கு கடும் சவாலாக உள்ளது. எனவே, இந்த சுரங்கங்களை முடக்கும் விதமாக புதுமையான ரகசிய ஆயுதம் ஒன்றை இஸ்ரேல் தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த 7 ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. காசா முனையில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை தாக்குதலால் திக்குமுக்காடிப்போன இஸ்ரேல், சுதாரித்துக் கொண்டு பதில் நடவடிக்கையை ஆரம்பித்தது. அப்போது முதல் கிட்டத்தட்ட ஒரு வாரத்தை நெருங்கி போர் இரு தரப்பினருக்கும் இடையே நீடித்து வருகிறது. 21 வது நாளாக இஸ்ரேல் -ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நீடித்து வருகிறது.

போர் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இஸ்ரேலின் தீவிர தாக்குதலால் காசாவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதனிடையே, கடந்த 7 ஆம் தேதி போர் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தரைவழி தாக்குதலுக்கு தயராக இருக்கும் இஸ்ரேல், காசா நகருக்குள் பீரங்கிகளுடன் நுழைந்துள்ளது. எனினும், இஸ்ரேலுக்கு மிகப்பெரும் சவால இருப்பது ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கங்கள்தான். பல பிணைக்கைதிகளை இந்த சுரங்கங்களில் தான் ஹமாஸ் அமைப்பினர் மறைத்து வைத்திருந்தனர்.
80 மீட்டர் ஆழத்தில் பல நூறு கி.மீட்டர்களுக்கு ஹமாஸ் இயக்கத்தினருக்கு சுரங்கங்கள் உள்ளது. பாதாள உலகம் என்று சொல்லபடும் அளவுக்கு ஹமாஸ் அமைப்பினருக்கு இந்த சுரங்கங்கள் முக்கிய பாதுகாப்பு கேடயமாக உள்ளது. இஸ்ரேலுக்கு பெரும் சவாலாக இந்த சுரங்கங்கள் உள்ளன. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினரின் சவாலை எதிர்கொள்ள இஸ்ரேல் ரகசிய ஆயுதம் ஒன்றை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது "sponge bombs" எனப்படும் புதிய குண்டுகளை இஸ்ரேல் தயாரித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்பாஞ்ச் குண்டுகள் உடனடியாக வெடித்து நுரைகளை வெளியேற்றும். உடனடியாக இது அப்பகுதி முழுவதும் பரவி பிறகு கடினமான திரை போன்று மாறிவிடுமாம். இந்த ரசாயன குண்டுகளை இஸ்ரேல் பரிசோதித்து வருவதாக தி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ரசாயன குண்டுகளில் வெடி பொருள் எதுவும் இருக்காது.
ஆனால், இடைவெளிகள் அல்லது சுரங்கங்களில் வாயில்களை முற்றிலும் சீல் வைக்க பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினர் சுரங்கங்களில் இருந்து தாக்குதலை முன்னெடுப்பதை முடக்கும் விதமாக இந்த ரசயான குண்டுகளை பயன்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இஸ்ரேல் கண்டுபிடித்து வைத்து இருக்கும் இந்த புதிய கருவிகள் பிளாஸ்டிக் கண்டெயினரில் பாதுகாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த ஸ்பாஞ்ச் பாம்ப்களில் ஒரு இரண்டு திரவங்களாக பிரித்து வைக்கப்பட்டு இருக்கும் மெட்டல் தடுப்புகள் இருக்கிறது. இதை செயல்படுத்தும் போது இந்த திரவங்கள் ஒன்றுக்கொன்று இணைந்து இலக்கை நோக்கி முன்னேறும். காசா எல்லையில் கடந்த 2021 ஆம் ஆண்டு போலியாக ஒரு சுரங்க பாதையை உருவாக்கி அப்போதே, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் பயிற்சி மேற்கொண்டு இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications