For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஸ்ரேலில் திருப்பம்.. ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்.. பதவியை இழக்கும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு!?

Google Oneindia Tamil News

டெல் அவிவ்: இஸ்ரேலின் காபந்து பிரதமராக இருக்கும் பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சியை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவரின் கட்சிக்கு எதிர்க்கட்சிகள் யாரும் ஆதரவு அளிக்காத நிலையில், ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையில் காஸாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கடும் மோதல் நடைபெற்றது. இந்த 11 நாள் நடந்த மோதலுக்கு பின் இரண்டு தரப்பும் அமைதியை கடைபிடிப்பதற்காக ஒப்பந்தம் செய்தது. இந்த நிலையில் தற்போது போர் முடிந்துள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவியை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளார்.

பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக பல்வேறு ஊழல் புகார்கள், குற்றச்சாட்டுகள், மோசடி புகார்கள் நிலுவையில் உள்ளன. இவருக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணையில் உள்ளன. இந்த நிலையில் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

2 பெரும் போர்கள்.. ஒரு ஒப்பந்தம்.. பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது எப்படி? கலங்க வைக்கும் வரைபடம்2 பெரும் போர்கள்.. ஒரு ஒப்பந்தம்.. பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது எப்படி? கலங்க வைக்கும் வரைபடம்

 ஆட்சி மாற்றம்

ஆட்சி மாற்றம்

இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை பாராளுமன்ற தேர்தல் நடந்துள்ளது. நான்கு முறையும் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி பெரும்பான்மை பெறவில்லை. அவர் கட்சியின் கூட்டணி பெரும்பான்மை பெறவில்லை. இதையடுத்து அங்கு எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பெஞ்சமின் நெதன்யாகு காபந்து பிரதமராக தொடர்ந்தார்.

காபந்து

காபந்து

காபந்து பிரதமராக இவர் நீடித்த நிலையில்தான் 4 தேர்தல்கள் அடுத்தடுத்து நடந்தன. ஆனால் எதிலும், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கடைசி தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 31 இடங்களில் மட்டுமே வென்றது. அவரின் கூட்டணி 54 இடங்களில் வென்றது. அங்கு ஆட்சி அமைக்க 120 இடங்களில் 61ல் வெல்ல வேண்டும்.

மாற்றம் வருகிறது

மாற்றம் வருகிறது

இந்த நிலையில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சியை இழக்கிறார். அங்கு எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 28 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. பின் இஸ்ரேல் காசா மோதலால் இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் புதன் கிழமைக்குள் அங்கு எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

கூட்டணி

கூட்டணி

அங்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தீவிர இடதுசாரி கட்சியான யாமினாவின் தலைவர் பென்னட் ஆதரவு அளித்துள்ளார். இதனால் எதிர்க்கட்சி கூட்டணிக்கு 66 இடங்கள் உள்ளன. இந்த கூட்டணியில் பிரதான கட்சியாக யாஷ் அடிட் கட்சி இருக்கும். இதன் தலைவர் யார் லாபிட்தான் இந்த கூட்டணியை முன்னின்று உருவாக்குவது. இவர் மைய அரசியல் கொள்கை கொண்டவர். இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் பென்னட் 2 வருடமும், லாபிட் கடைசி 2 வருடமும் பிரதமராக இருப்பார்கள்.

சிக்கல்

சிக்கல்

அங்கு எதிர்க்கட்சி கூட்டணியில் வலதுசாரி கட்சி, தீவிர வலதுசாரி கட்சி, மய்ய கட்சி, அரபு ஆதரவு கொண்ட கட்சி என்று எல்லா விதமான கட்சிகளும் உள்ளன. இஸ்ரேல் போன்ற ஒரு நாட்டில் இப்படி அனைத்து விதமான கொள்கை கொண்ட கட்சிகளும் ஆட்சி அமைப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தும். வரும் புதன் கிழமைக்குள் இந்த கூட்டணி ஆட்சி அமைக்கும்.

ஆட்சி

ஆட்சி

ஆனால் இதை தடுக்க 12 வருடமாக ஆட்சியில் இருக்கும் பெஞ்சமின் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணியை உடைக்க பெஞ்சமின் கண்டிப்பாக முயல்வார். காஸா, பாலஸ்தீன பூகோள அரசியலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் தோல்வி பெரிய திருப்பத்தை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 2 நாட்களில் இஸ்ரேல் அரசியல் தலைகீழாக மாறும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

English summary
Israel oppoents parties agrees to oust PM Benhamin Netanyahu: Close to form the government with central and left support.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X