3-வது நாள் யுத்தம்: 1200 பேர் பலி; இஸ்ரேல்- 700; பாலஸ்தீனம்- 500 பேர் மரணம்- வரலாறு காணாத பேரழிவு!
டெல் அவிவ்: இஸ்ரேல் எனும் நாடு அது உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை இல்லாத பேரழிவை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஜிஹாதிகளின் தாக்குதலால் எதிர்கொண்டிருக்கிறது.
இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஜிஹாதிகள் யுத்தம் 3-வது நாளாக நீடிக்கிறது. இந்த யுத்தத்தின் பேரழிவு மற்றும் அரசியல் நடவடிக்கைகள், இஸ்ரேலின் நகர்வுகள், ஹமாஸ் ஆதரவு நாடுகள் குறித்த 20 தகவல்கள்:

1.பாலஸ்தீனத்தின் மீது அதிகாரப்பூர்வமான யுத்த பிரகடனத்தை வெளியிட்டுள்ளது இஸ்ரேல்
2.இஸ்ரேல், ஹமாஸ் யுத்தத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,000-த்தை தாண்டியது
3.இஸ்ரேலில் மட்டும் சுமார் 700 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4.ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட 57 ராணுவ வீரர்கள், 34 போலீஸ் அதிகாரிகள் விவரங்களை பகிரங்கப்படுத்தியுள்ளது இஸ்ரேல்.
5.இஸ்ரேல் ராணுவ வீரர்கள், பொதுமக்கள், வெளிநாட்டவர் என 100க்கும் மேற்பட்டோர் ஹமாஸ் பிடியில் பிணைக் கைதிகளாக உள்ளனர்.
6.இஸ்ரேல் பதில் நடவடிக்கையால் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனத்தின் காஸா, மேற்கு கரை பகுதிகளில் சுமார் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் மட்டுமே 2,200 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
7.ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஹமாஸை கண்டிக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தி உள்ளது.
8.லெபனான் ஆயுதக் குழுவான ஹெஸ்புல்லா அல்லது ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
9.இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் 10 நேபாள மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
10.வட அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் ஹமாஸ் பாலஸ்தீன ஜிஹாதிகளின் இஸ்ரேல் மீதான யுத்தத்தை ஆதரித்து பேரணிகள் நடைபெற்று வருகின்றன.
11.எகிப்தில் இரண்டு இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் அந்நாட்டு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பாலஸ்தீன ஹமாஸ் ஜிஹாதிகளை ஆதரிக்கிறது எகிப்து.
12.ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட அமெரிக்கர்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
13.இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலால் காணாமல் போன குடும்ப உறுப்பினர்களை அடையாளம் காண உதவும் வகையில் டிஎன்ஏ மாதிரிகள் கொடுப்பதற்காக பெரும் கியூ வரிசைகளில் பொதுமக்கள் காத்துகிடக்கின்றனர்.
14.ஹமாஸுக்கு எதிரான போரில் வெல்வோம் என்று இஸ்ரேலிய ஜனாதிபதி ஹெர்சாக் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
15.பாலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல உதவுங்கள் என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.
16.பாலஸ்தீன ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலுக்கு "கூடுதல் ஆதரவை" வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உத்தரவிட்டுள்ளார்
17.இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை தொடர்பு கொண்டு பேசினார்.
18.ஐரோப்பிய தலைவர்களுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்பு கொண்டு நிலைமைகளை விவரித்தார்.
19.இஸ்ரேலில் தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்று போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பயங்கரவாதமும் போரும் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்காது, அப்பாவி மக்களுக்கு துன்பத்தையும் மரணத்தையும் மட்டுமே தருகின்றன எனவும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
20,இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர துருக்கி மத்தியஸ்தராக செயல்படக் கூடும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications