"மாஸ்டர் பிரெய்ன்" சின்வார் காலி.. “இன்னும் வேலை முடியல.. ஹமாஸை அழிப்போம்” சபதம் எடுத்த நெதன்யாகு!
ஜெருசலேம்: "ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது, வெறும் ஆரம்பம் மட்டுமே, எங்களுக்கு முன்னால் உள்ள பணி இன்னும் முழுமையடையவில்லை. மீதமிருக்கும் ஹமாஸின் தலைவர்களும் ஒழித்துக் கட்டப்படுவார்கள்" என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். இதையடுத்து ஹமாஸ் படையின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார். இவர் தான் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி நடந்த இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் என இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

சின்வாரின் தோற்றத்தில் இராணுவ பாணியில் உடை அணிந்த நபர், சிதைந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய நிலையில், தலையில் காயத்துடன் இறந்து கிடந்த புகைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் உயிரிழந்ததாக இஸ்ரேல் உறுதிப்படுத்தி உள்ளது.
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதை உறுதி செய்த இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, "எங்கள் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை" என்று கூறியுள்ளார். சின்வாரின் கொலையை இந்தப் போரில் ஒரு முக்கிய தருணம் என்று குறிப்பிட்டுள்ள நெதன்யாகு, காசாவில் வசிப்பவர்கள், இறுதியாக ஹமாஸின் கொடுங்கோன்மையிலிருந்து விடுபட இது ஒரு வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
"காசாவில் இருந்து ஹமாஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதில் சின்வாரின் மரணம் ஒரு அடையாளம். தீய சக்திகள் பலத்த அடியை சந்தித்துள்ள போதிலும், எங்களுக்கு முன்னால் உள்ள பணி இன்னும் முழுமையடையவில்லை. மீதமிருக்கும் ஹமாஸின் தலைவர்களும் ஒழித்துக் கட்டப்படுவார்கள்" என்றும் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலியர்களை பணயக்கைதிகளாக வைத்திருப்பவர்கள், ஆயுதங்களை தூக்கி எரிந்து விட்டு அவர்களை திருப்பி அனுப்ப அழைப்பு விடுத்ததோடு, அவ்வாறு செய்பவர்கள் வெளியே சென்று நிம்மதியாக வாழ அனுமதிக்கப்படுவார்கள், பணயக்கைதிகளுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், யாஹ்யா சின்வாரை கொன்ற இஸ்ரேலிய வீரர்களை பாராட்டிய அவர், காசாவில் இன்னும் பணயக்கைதிகளாக இருப்பவர்களின் குடும்பத்தினரிடம், "உங்கள் அன்புக்குரியவர்கள் அனைவரும் வீடு திரும்பும் வரை முழு பலத்துடன் இஸ்ரேல் பணியை தொடரும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications