ஹமாஸ்க்கு பெரிய அடி.. குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்.. காசா எல்லைப்பகுதியை மீட்டதாக அறிவிப்பு
டெல் அவிவ்: காசா எல்லைப்பகுதிகளை ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட்டோம் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. போரினால் இதுவரை இரு தரப்பிலும் சேர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த 7ம் தேதி, காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதலை தொடங்கினர். ஆபரேஷன் அல் அக்ஷா புயல் என்ற பெயரில் தாக்குதலை ஹமாஸ் பயங்கரவாதிகள் தொடங்கினர்.

இந்த தாக்குதலில் இஸ்ரேல் திக்கு முக்காடிப்போனது. ராக்கெட் மழை பொழிந்து ஒருபக்கம் தாக்குதல் என்றால் மற்றொரு பக்கம் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி சரமாரி தாக்குதலை தொடுத்தனர். இதையடுத்து, ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரை அறிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகு தாக்குதலை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையெயான போர் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகிறது.
75 ஆண்டுகளில் இல்லாத அளவு: இதனிடையே இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போர் 4-வது நளாக நீடித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை திடீரென இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் பயங்கரவாதிகள் ராக்கெட் மூலமாக தாக்குதல் நடத்தியது மட்டும் இன்றி கார், மோட்டார் சைக்கிள், பாராசூட்டில் இஸ்ரேலுக்குள் நுழைந்து அங்கு கண்மூடித்தனமாக தாக்கினர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் உக்கிரமாக பதிலடி கொடுத்து வருகிறது.
பாலஸ்தீனத்துடன் போர் தொடங்கி உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்து தாக்குதலை தொடங்கி உள்ளார். காசா பகுதியில் போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் குண்டுகளை வீசி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே அவ்வப்போது மோதல் வெடித்து வருவது வாடிக்கைதான் என்றாலும் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது யுத்தம் தீவிரம் அடைந்துள்ளது.
3000 பேர் பலி: இந்த தாக்குதலில் தற்போது வரை இருதரப்பையும் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் 6000 பேர் காயமடைந்துள்ளனர். குழந்தைகள், பெண்களும் பலியாகி உள்ளதோடு, ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதனிடையே, காசா எல்லைப்பகுதிகளை ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டு இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, காசாவில் இருந்து ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், லெபனானில் இருந்தும் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலின் வடக்கு பகுதிகளை குறிவைத்து லெபனானின் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் நடத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதால் இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேலிய ராணுவம் பீரங்கித் தாக்குதலை தொடங்கியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications